கரம் மசாலா பயன்படுத்துவதால் உண்டாலுக்கு என்னென்ன நன்மைகள்

கரம் மசாலா நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது என்பது பலர் அறியாத ஒரு விஷயமாகும். இதன் முழு விவரத்தை இங்கே காண்போம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 8, 2021, 06:19 AM IST
கரம் மசாலா பயன்படுத்துவதால் உண்டாலுக்கு என்னென்ன நன்மைகள் title=

மசாலாப் பொருள் என்பது உலர்ந்த விதை, பழம், வேர், பட்டை, இலை அல்லது பதியமுறையான பொருள்களை உணவில் பயன்படுத்துவது ஆகும். நறுமணச்சுவை, நிறம் போன்றவற்றிற்காக அல்லது கேடுவிளைவிக்கும் பாக்டீரியாவைக் கொல்வதற்கு அல்லது அதன் வளர்ச்சியைத் தடுப்பதற்கு உணவு சேர்க்கையாக ஊட்டச்சத்தாக சிறிய அளவில் மசாலாப் பொருள் சேர்க்கப்படுகிறது.

அதன்படி மக்கள் அடிப்படையாகப் பயன்படுத்தும் ஒரு மசாலாதான் கரம் மசாலா (Garam Masala). கரம் மசாலா பல்வேறு மசாலா பொருட்களின் கலவையாக இருக்கிறது. இதனால் இது சைவம் அசைவம் என அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கிராம்பு, இலவங்கபட்டை, சீரகம், ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் கருப்பு மிளகு இவற்றின் கலவையாக கரம் மசாலா உள்ளது. இது நமது உடல் ஆரோக்கியத்திற்கு (Health Benefits) பல வழிகளில் நன்மை பயக்கிறது. எனவே மசாலா பொருட்களினால் பல நன்மைகள் மற்றும் சில பக்க விளைவுகளும் உள்ளன என்பது பற்றி இங்கே காண்போம். 

ALSO READ | Retro Walking: பின்னோக்கி நடப்பதால் ஏற்படும் நன்மைகள் உங்களை வியக்க வைக்கும்

​செரிமானத்தை மேம்படுத்தும்:
செரிமானத்தை மேம்படுத்துவதில் கரம் மசாலா பல நன்மைகளை செய்கிறது. இது செரிமானத்தை எளிதாக்குகிறது. இந்த மசாலா வயிற்றில் இரைப்பையின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. மேலும் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. 

இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்:
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த கரம் மசாலா மிகவும் உதவுகிறது. கரம் மசாலாவில் ஏலக்காயின் நன்மை உள்ளது. இது உங்கள் இதயத்திற்கு நன்மை பயக்க கூடியது என்று அறியப்படுகிறது. மேலும் இந்த மசாலாவை உணவில் சேர்ப்பது மூலம் உங்கள் இரத்த அழுத்த அளவை சீராக்க முடியும். மேலும் இது உங்கள் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்:
புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை தடுக்க கூட கரம் மசாலா உதவுகிறது. மேலும் கரம் மசாலா பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. எனவே அவை உடலில் புற்றுநோய் கட்டிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றன.

வலி மற்றும் வீக்கம்:
கரம் மசாலா பொருட்களில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. அவர்கள் வலி மற்றும் வீக்கத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்க முடியும்.

ALSO READ | பிரிட்ஜில் வைக்கப்பட்ட இறைச்சி சாப்பிடலாமா? அதனால் ஏற்படும் அபாயம் என்ன?

சளி மற்றும் இருமலுக்கு நிவாரணம்: 
சளி மற்றும் இருமல் பிரச்சனை ஏற்படுவது பொதுவானது. கிராம்பு, கறுப்பு மிளகு மற்றும் இலவங்கப்பட்டை போன்ற பொருட்கள் அத்தகைய வியாதிகளை உடனடியாக குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News