Stretch marks removal: பிரசவ தழுப்புகளை நீக்கும் ‘4’ வீட்டு வைத்தியங்கள்

உடலில் கோடுகள் போல் தோன்றும் ஸ்ட்ரெட்ச் மார்க்  எனப்படும் பிரசவ தழும்புகள் தாய்மை அடைந்த பெண்களுக்கு உண்டாகிறது. பெண்களுக்கு மட்டுமல்ல, சில காரணங்கள் காரணமாக ஆண்களுக்கும்  ஸ்ட்ரெச் மார்க் ஏற்படுகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 31, 2021, 12:13 PM IST
  • கார்டிகோஸ்டீராய்டு மருந்துகளின் பயன்பாடு காரணமாக தழும்புகள் ஏற்படுகிறது.
  • மார்பக விரிவாக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு ஸ்ட்ரெச் மார்க்குகள் ஏற்படுகிறது
  • சிசேரியன் அறுவை சிகிச்சை, முதலியனவும் இதற்கு காரணம்.
Stretch marks removal: பிரசவ தழுப்புகளை நீக்கும் ‘4’ வீட்டு வைத்தியங்கள் title=

உடலில் கோடுகள் போல் தோன்றும் ஸ்ட்ரெட்ச் மார்க்  எனப்படும் பிரசவ தழும்புகள் தாய்மை அடைந்த பெண்களுக்கு உண்டாகிறது. பெண்களுக்கு மட்டுமல்ல, சில காரணங்கள் காரணமாக ஆண்களுக்கும்  ஸ்ட்ரெச் மார்க் ஏற்படுகிறது.  

ஸ்ட்ரெச் மார்க் காரணங்கள்

ஆண்களை விட அதிகமான பெண்களுக்கு தான் அதிக அளவில் ஸ்டரெச் மார்க் ((Stretch Marks) ஏற்படுகிறது. இதன் பின்வருபவை காரணம் ஆகும்

- கர்ப்பம் காத்தில் விரைவான எடை அதிகரிப்பு  குறைதல், குறிப்பாக, வயிற்று பகுதி விரிவடைந்து பின் , பிரசவத்திற்கு பின் திடீரென் சுருங்குவதன் காரணமாக, தோல்களில் வடுக்கள் ஏற்படுகிறது. இது பிரசவ தழும்புகள் என்றும் கூறப்படுகிறது

- கார்டிகோஸ்டீராய்டு மருந்துகளின் பயன்பாடு

- மார்பகங்களை பெரிது படுத்தும் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு ஸ்ட்ரெச் மார்க்குகள் ஏற்படுகிறது

- சிசேரியன் அறுவை சிகிச்சை, முதலியனவும் இதற்கு காரணம்

மேலே குறிப்பிட்ட காரணங்கள் அல்லது பிற காரணங்கள்  காரணமாக இடுப்பு, இடுப்பு, வயிறு, மார்பகம் மற்றும் அக்குள் அருகே உடலின் ஸ்ட்ரெச் மார்க்குகள் அல்லது கோடுகள் வடிவிலான தழும்புகள் ஏற்படுகின்றன. ஸ்ட்ரெட்ச் மார்க்கை அகற்ற சில வீட்டு வைத்தியங்களை இங்கே காணலாம்.

ALSO READ | Health Tips: பூண்டை அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் ஆபத்தான பக்க விளைவுகள்..!!!

 

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் ஸ்ட்ரெட்ச் மார்க்கை அகற்ற மிகவும் சிறந்தது. இந்த தழும்புகளின் தோற்றத்தை மிக விரைவாக குறைக்கிறது. உங்களுக்கு தேங்காய் எண்ணையில் ஒவ்வாமை இல்லை என்றால், நீங்கள் தினமும் சுத்தமான தேங்காய் எண்ணெயை ஸ்ட்ரெட்ச் மார்க்கில் தடவலாம். இது மிகச்சிறந்த பலனை கொடுக்கும்

சர்க்கரை

அக்குள் பகுதியில் உள்ள ஸ்ட்ரெச் மார்க்குகளை நீக்க சர்க்கரையைப் பயன்படுத்தவும்.  இது மிகவும் உதவியாக இருக்கும். இதற்காக, 1/4 தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயில் 1 கப் சர்க்கரையை கலக்கவும். இதன் பிறகு, இந்த கலவையில் சிறிது எலுமிச்சை சாற்றைச் சேர்க்கவும். இப்போது இந்த கலவையை  தழுப்பு உள்ள பகுதியில் தடவி 8 முதல் 10 நிமிடங்கள் மெதுவாக தடவி பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!

கற்றாழை

பெரும்பாலான மக்கள் ஸ்ட்ரெச் மார்க்குகளை நீக்க, அதனை அகற்றும் கிரீம் தேடுகிறார்கள், ஆனால் நீங்கள் அதற்கு பதிலாக கற்றாழை பயன்படுத்த முயற்சி செய்யலாம். ப்ரெஷ்ஷான கற்றாழை இலையை எடுத்து, அதன் உள்ளே இருக்கும் ஜெல்லை அகற்றி, இந்த ஜெல்லை ஸ்ட்ரெடச் மார்க்கில் தடவி 20 முதல் 40 நிமிடங்கள் அப்படியே விடவும். அதன் பிறகு கழுவவும். நீங்கள் கற்றாழை கலந்த தேங்காய் எண்ணெயையும் தடவலாம்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு தோலின் மீதுள்ள தழும்புகளை அகற்றவும் பயன்படும். ஏனெனில், இது தோலை வெளுக்க செய்யும் ஏஜெண்டாகவும் செயல்படுகிறது. ஒரு உருளைக்கிழங்கை எடுத்து துருவி அதை பிழிந்து சாறு எடுக்கவும். இப்போது இந்த சாற்றை அரைத்த உருளைக்கிழங்குடன் மீண்டும் கலந்து, 30 நிமிடங்கள் தழும்புகள் உள்ள இடத்தில் தடவி அப்படியேவும். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து சருமத்தை சாதாரண நீரில் கழுவவும்.

பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைகளுக்கும் மாற்றாக இல்லை. இது பொதுவான விழிப்புணர்வு தகவல் வழங்கும் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.

ALSO READ | Migraine: ஒற்றை தலைவலியை உடனே விரட்டும் ‘5’ சூப்பர் உணவுகள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News