உலகம் முழுவதும் சத்தான ஆகாரங்களில் பாலுக்கு எப்போதும் இடம் உண்டு. பாலை குடிப்பதால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால், பால் குடிப்பதற்கு முன்னர் எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதில் கவனம் அவசியம் இருக்க வேண்டும்.
புளிப்பு தன்மை உடைய பழங்கள்:
பால் பருகுவதற்கு முன்பு புளிப்பு தன்மை கொண்ட ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களை தவிர்த்துவிட வேண்டும். அப்படி சாப்பிட்ட பிறகு பால் குடித்தால் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்.
மேலும் படிக்க | இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’ நிறைந்த உணவுகளை அவசியம் டயட்டில் சேர்க்கவும்
அப்படி அந்த பழங்களை சாப்பிட்டால் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் கழித்துதான் பால் பருக வேண்டும். இத்தகைய பழங்களை சாப்பிட்ட உடனே பால் குடித்தால் பாலில் இருக்கும் கால்சியம் பழத்தின் என்சைம்களை உறிஞ்சிவிடும். மேலும் பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்களும் உடலில் சேராது.
உளுத்தம் பருப்பு:
உளுத்தம் பருப்பு கலந்த உணவு பொருட்களை சாப்பிட்டதும் பால் பருகக்கூடாது. அது செரிமானத்தை பாதிக்கும். பாலையும், உளுத்தம் பருப்பு உணவுகளையும் ஒன்றாக உட்கொள்வது உடலுக்கு ஏற்றதல்ல. அதனால் வயிற்று வலி, வாந்தி உருவாகும். உடல் பருமனும் ஏற்படும்.
பாகற்காய்,வெண்டைக்காய்:
பாகற்காய், வெண்டைக்காய் போன்றவைகளை சாப்பிட்டவுடன் பால் பருகினால், முகத்தில் கறுப்பு புள்ளிகள் தோன்றக்கூடும்.
மீன்:
மீன் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும் அதனை சாப்பிட்டதும் பால் பருகினால் செரிமானம் பாதிக்கும். உணவு விஷமாக மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. வயிற்றுவலி, சருமத்தில் வெண் புள்ளிகள் ஏற்படவும் செய்யும்.
மேலும் படிக்க | Vitamin D: வைட்டமின் டி அதிகமானால் ஏற்படும் ஹைப்பர்வைட்டமினோசிஸ் அபாயங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR