COVID-19 Vaccine தயாரிப்பை தொடங்கியுள்ள ரஷ்யா.. சந்தேகத்தை கிளப்பும் விஞ்ஞானிகள்..!!!

COVID-19 தடுப்பு மருந்து தயாரிப்பை ரஷ்யா தொடங்கியுள்ள நிலையில், விஞ்ஞானிகள் சந்தேகங்களை எழுப்புகின்றனர்.

Last Updated : Aug 15, 2020, 08:03 PM IST
  • உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை, ரஷ்யாவின் கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து உருவாக்கியுள்ளது.
  • செப்டம்பர் முதல் தொழில் ரீதியிலான மருந்து உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ரஷ்யா கூறியுள்ளது.
  • ரஷ்யா தயாரித்துள்ள தடுப்பூசி குறித்த முடிவு எதையும் எடுக்கும் அளவிற்கு, எங்களுக்கு போதுமான தகவல்கள் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது
COVID-19 Vaccine தயாரிப்பை தொடங்கியுள்ள ரஷ்யா.. சந்தேகத்தை கிளப்பும் விஞ்ஞானிகள்..!!! title=

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்து, அதாவது கோவிட் -19 தடுப்பூசி தயார் என அறிவித்த  பின்னர், ரஷ்யா இப்போது தடுப்பு மருந்து தயாரிப்பில் இறங்கியுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாக அறிக்கை ஒன்று கூறுகிறது

தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனமான கமலேயா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து தயாரிப்பு தொடங்கியுள்ளதாக, ரஷிய செய்தி நிறுவனமான ஸ்பூட்னிக் நியூஸ் தெரிவித்துள்ளது.

இந்த மாத இறுதிக்குள் இந்த தடுப்பூசி விற்பனை தொடங்கும் என்று ரஷ்யா தெரிவித்துள்ள, நிலையில், முதலில் தடுப்பு மருந்து கண்டுபிடித்த நாடாக ரஷ்யா இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அந்நாடு அவசர கதியில் செயல்பட்டு பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தரவில்லை என சில விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள்.
 
ஆனால், அனைத்து வகையான நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டு, கவனமாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்றும், மாஸ்கோவின் ஆராய்ச்சியை, உழைப்பை குறைத்து மதிப்பிடும் செயல் இது என, விமர்சனங்களை நிராகரித்துள்ளது.

முன்னதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகஸ்ட் 11 ஆம் தேதி, 1957 ஆம் ஆண்டு  ரஷ்யா சோவியத் யூனியனாக இருந்த போது ஏவப்பட்ட செயற்கைக்கோளை நினைவுபடுத்தும் வகையில், கொரோனா தடுப்பு மருந்துக்கு  "ஸ்பூட்னிக் வி" என பெயரிட்டார். இந்த தடுப்பு மருந்து தனது இரண்டு மகள்களில் ஒருவருக்கு போடப்பட்டு அவர் உடல் நிலை நன்றாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ALSO READ | நீண்டகால காத்திருப்பு முடிவுக்கு வந்ததா... கொரோனா தடுப்பு மருந்து தயார் என்கிறது ரஷ்யா!!

கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகில்  20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு, உலகளவில் கிட்டத்தட்ட 7,50,000 இறந்து விட்டனர். இதனால் உலகலவில் பொருளாதாரமும் முடங்கியுள்ளது.

இந்த மருந்தை தயாரித்த கமலேயா ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் தனது நாடு உருவாக்கிய தடுப்பூசி குறைந்தது இரண்டு வருடங்களுக்கு கொரோனாவிலிருந்து பாதுகாப்பை வழங்கும் என்று கூறினார்.

தொழில் ரீதியிலான உற்பத்தி செப்டம்பர் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள் மாதத்திற்கு 5 மில்லியன் டோஸ் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

ALSO READ | கொரோனா பயத்துல குழம்பாதீங்க… தேவையில்லாம யோசிச்சு பதறாதீங்க..!!!

தடுப்பு மருந்து முதலில் மருத்துவர்களுக்குக் கிடைக்கும் என்றும் பின்னர் அனைத்து வாங்கும் ஆர்வமுள்ள ரஷ்யர்களுக்கும் கிடைக்கும் என்றும் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ கூறினார்.

இருப்பினும், பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் மருந்து நிறுவனங்கள் ரஷ்யாவின் இந்த அவசர நடவடிக்கை ஆபத்தானது என்று கூறியுள்ளன. ரஷ்யா ஏன் இவ்வளவு அவசரப்படுகிறது என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

பரிசோதனையின் மேம்பட்ட நிலைகளில் இருப்பதாக கருதும் ஒன்பது மருந்துகளின் பட்டியலில், 
இந்த வாரம் ரஷ்யாவால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்து  இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

ரஷ்யா தயாரித்துள்ள தடுப்பூசி குறித்த முடிவு எதையும் எடுக்கும் அளவிற்கு, எங்களுக்கு போதுமான தகவல்கள் இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநரின் மூத்த ஆலோசகர் டாக்டர் புரூஸ் அய்ல்வர்ட் கூறினார்.

ரஷ்யாவில் இதுவரை 9,17,000 க்கும் அதிகமானமானோர் கொரோனா தொற்றுநோயால பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகில் நான்காவது இடத்தில் ரஷ்யா உள்ளது.

Trending News