மன அழுத்தத்தை போக்கும் ‘சந்தன எண்ணெய்’; பயன்படுத்தும் எளிய வழிகள்!

நமது இன்றைய வாழ்க்கை முறையில் பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்படாத நபர்களை பார்ப்பது என்பது மிகவும் அரிது. 

Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 17, 2022, 03:15 PM IST
  • அரோமாதெரபியில் சந்தன எண்ணெய் பயன்படுத்தும் வழிமுறைகள்
  • பல நோய்களை நெருங்க விடாமல் தடுக்கும் திறன் கொண்டது.
  • சந்தன எண்ணெயின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்.
மன அழுத்தத்தை போக்கும் ‘சந்தன எண்ணெய்’; பயன்படுத்தும் எளிய வழிகள்! title=

இயற்கையான முறையில் சருமம் மற்றும் முடியை மேம்படுத்தும், சந்தன எண்ணெயில் ஆரோக்கிய நன்மைகள் பல நிறைந்துள்ளன. பாரம்பரிய மற்றும் ஆயுர்வேத மருந்துகளை தயாரிப்பதில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படும் சந்தன எண்ணெய் தற்போது, பல வாசனை திரவியங்கள் மற்றும் ரூம் ஃப்ரெஷ்னர்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

சந்தன எண்ணெய் மன அழுத்தம், பதற்றம் உட்பட ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சனைகளை நீக்கும் என்பதும் பல ஆராய்ச்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது. இன்று சந்தன எண்ணெயின் அற்புதமான குண நலன்களையும், வீட்டில் அரோமாதெரபியாக, நறுமண சிகிச்சையாக அதனை பயன்படுத்தும் வழிகளையும் அறிந்து கொள்ளலாம்.

சந்தன எண்ணெயின் நன்மைகள்

இந்தியாவில் ஆயுர்வேத மருந்துகளில் சளி, செரிமான பிரச்சனைகள், மன நோய்கள், தசைகள், கல்லீரல் மற்றும் பித்தப்பை பாதிப்புகள் போன்ற பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது.

1. கவலையை போக்கும் சந்தன எண்ணெய்

நமது இன்றைய வாழ்க்கை முறையில் பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்படாத நபர்களை பார்ப்பது என்பது மிகவும் அரிது. அதிலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, மக்கள் மத்தியில் கவலை, பதற்றம், அச்சம் ஆகியவை மிக அதிகமாகக் காணப்படுகிறது. சந்தன எண்ணெயுடன் அரோமாதெரபி மசாஜ் செய்வதன் மூலம் பதட்டத்திலிருந்து விடுபட உதவும் என்று மருத்துவ ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது. மேலும்  சந்தன எண்ணெய் மன அழுத்தத்தையும் குறைக்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | Health Alert: குளிக்கும் போது செய்யும் பொதுவான தவறுகள்! 

2. காயங்களை குணப்படுத்தும் திறன்

தோலில் காயம் அல்லது ஏதேனும் காயம் ஏற்பட்டால், அதில் சந்தன எண்ணெய் தடவுவது, விரைவில் குணமடைய உதவும் என ஜெர்மனியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கை கூறுகிறது. இந்த எண்ணெய் சரும செல்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதே இதற்கு காரணம்.

3. தோல் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு 

தோல் புற்றுநோயை எதிர்த்துப் போராடவும் சந்தன எண்ணெய் உதவும். சந்தன எண்ணெயில் α-santalol என்ற கலவை உள்ளது. இது புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது என உயிர்வேதியியல் மற்றும் உயிர் இயற்பியல் காப்பகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கூறுகிறது.

மேலும் படிக்க | Weight loss Tips: உடல் எடை குறைய தினசரி பழக்கத்தில் ‘சில’ சிறிய மாற்றங்களே போதும்!

4. முகப்பருவை போக்கும்

சந்தன எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதன் காரணமாக முகப்பருவுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. முகப்பரு மற்றும் பருக்கள் போன்ற பிரச்சனைகளை நீக்கி சருமத்தை உள்ளே இருந்து சுத்தம் செய்கிறது.

வீட்டில் சந்தன எண்ணெய் அரோமா சிகிச்சையை மேற்கொள்வது எப்படி  

வீட்டில் அரோமாதெரபி என்னும் நறுமண சிகிச்சை மூலம் சந்தன எண்ணெயைப் 5 வழிகளில் பயன்படுத்தலாம்:

1.  சந்தன எண்ணெயை நேரடியாக தோலில் தடவலாம்.

2. உங்கள் லோஷனில் சில துளிகள் எண்ணெய் பயன்படுத்தலாம்.

3. ஒரு கெட்டில் தண்ணீரில் சில துளிகள் சந்தன எண்ணெயை போட்டு சூடாக்கவும். இவ்வாறு செய்வதால் அதன் மணம் வீடு முழுவதும் பரவும்.

4. ஆயில் இன்ஃப்யூசரின் உதவியுடன், இந்த எண்ணெயின் நறுமணத்தை வீட்டின் ஒவ்வொரு மூலை மற்றும் மூலையிலும் கொண்டு செல்ல முடியும்.

5. உங்கள் குளியல் தண்ணீரில் சந்தன எண்ணெயை கலந்து பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News