Health Tips In Tamil: பலருக்கும் தூக்கம் சார்ந்து பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. மோசமான வாழ்க்கை முறை, அதீத கணனி, மொபைல் பயன்பாடு காரணமாக இரவில் சரியான நேரத்தில் தூங்காமல் நீண்டநேரம் கொட்ட கொட்ட முழுத்திருக்கும் பழக்கம் தற்போது அதிகரித்துவிட்டது. மன அழுத்தம், பதற்றம் மற்றும் பனி போன்ற சுற்றுச்சூழல் சார்ந்து என பல்வேறு காரணங்கள் மோசமான தூக்கத்திற்கு வழிவகுக்கும். ஒருநாள் இரவு 12 மணிக்கு தூங்கி மதியம் 11 மணிவரை தூங்குவது, ஒருநாள் நள்ளிரவு 2 மணிக்கு தூங்கி காலை 6 மணிக்கு எழுந்திருப்பது என அதீத தூக்கமும், குறைவான தூக்கமும் பிரச்னைக்கு வழிவகுக்கும்.
வயது வந்தோருக்கு 7-8 மணிநேரம் ஆழ்ந்த தூக்கம் தேவை என்கிறார்கள் மருசத்துவ வல்லுநர்கள். அப்படி தினமும் 7-8 மணிநேரம் சரியாக தூங்கவில்லை என்றால் உடல்நிலை சார்ந்த பிரச்னைகள் அதிகரிக்கும். அதேவேளையில், நள்ளிரவுக்கு பின்னர் தூங்குவது சரியான பழக்கம் கிடையாது என்றும் கூறுகிறார்கள். இரவு 10 மணி முதல், அதிகாலை 6 மணிவரை தூங்குவதற்கு ஏதுவான நேரம் எனவும் கூறப்படுகிறது. ஒரு சிலர் இரவில் வெகு சீக்கிரமாகி தூங்கி, அதிகாலை விரைவாக எழுவதை ஒரு பழக்கமாக வைத்திருப்பார்கள். இதுவும் ஆரோக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
உடல்நலப் பிரச்னை
அப்படியிருக்க, தினமும் நள்ளிரவிலேயே தூங்கி காலையில் தாமதமாக எழுந்திருப்பதால் உண்டாக்கும் பிரச்னைகள் ஏராளம். நள்ளிரவில் பைக்கில் ஊர் சுற்றுவது, துரித உணவு கடைகளில் நள்ளிரவில் அதிக உணவை உண்பது ஆகியவையும் மோசமான பழக்கவழக்கமாகும். தினமும் நள்ளிரவிலேயே தூங்கினால் என்னென்ன உடல்நலப் பிரச்னைகள் வரும் என்பதை இங்கு காணலாம்.
மேலும் படிக்க | வேகமா எடை குறைய ஈசியான வழி: வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் போதும்
உடல் எடை அதிகரிக்கும்
தூக்கம் ஏடாகுடமாக இருந்தால் உடல் எடையும் ஏடாகுடமாக உயரும். நள்ளிரவில் தூங்குவதால் பசியை தூண்டும் Ghrelin ஹோர்மோன் அதிகமாகவும், வயிறு நிறைவை உண்டாக்கும் Leptin ஹோர்மோன் குறைவாகவும் சுரக்கும். இதனால் நள்ளிரவில் அதிக உணவை எடுத்துக்கொள்ள நேரும். இதனால் உடல் எடை எக்குத்தப்பாக ஏறும்.
மன அழுத்தம் அதிகமாகும்
Cortisol, Adrenaline போன்ற ஹோர்மோன் அழுத்தத்தை உண்டாக்கும். இதனால் பதற்றம், சௌகரியம், கோபம் ஆகியவை உண்டாகும். இனதால் நிம்மதியாக தூங்க முடியாது, அடிக்கடி முழிப்பு தட்டலாம். அதிகமாக இந்த ஹோர்மோன்கள் சுரந்தால் அவை நீண்டகால நோக்கிலும் கடும் பிரச்னைகளை விளைவிக்கக் கூடியதாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறையும்
நள்ளிரவிலேயே தினமும் தூங்கினால் நோய் எதிர்ப்பு சக்தி வலவீனமாகும். இதனால் அடிக்கடி நோய்வாய்ப்படுவீர்கள். அதாவது, நோய்களுக்கு எதிராக, தொற்றுகளுக்கு எதிராக உங்கள் உடல் போரிடும் தன்மையை இழந்துவிடும்.
பகலில் சோர்வாக உணர்வீர்கள்
நள்ளிரவில் தூங்கினால் உங்களின் ஒட்டுமொத்த தூக்க அமைப்பும் கெட்டுப்போய்விடும். உடல் இந்த நேரத்தில் தூங்கி, இந்த நேரத்தில் எழுந்திருக்கும் என்ற நிலை இல்லாமல் ஏனோதானோ என்று தூங்கினாலும் பிரச்னைதான். மேலும் இதனால் பகல் பொழுதில் சோர்வாகவும், சோம்பேறித்தனமாகவும் உணர்வீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது)
மேலும் படிக்க | குளிர்காலத்தில் இந்த மசாலா பொருட்களை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ