Sleep Divorce, Relationship | விவாகரத்து பொதுவாக கருத்து வேறுபாடு காரணமாக தம்பதிகளிடையே ஏற்படும். ஆனால், அண்மைக் காலமாக உலகம் முழுவதும் வெவ்வேறு விநோத காரணங்களுக்காக எல்லாம் விவகாரத்துகள் பெறக்கூடிய சம்பவம் அதிகரித்துவிட்டது. அதில் ஒன்று ஸ்லீப் டைவர்ஸ். இந்த வகையான விவகாரத்து சிலருக்கு வேடிக்கையாக இருக்கலாம். அதனால், ஸ்லீப் டைவர்ஸ் என்றால் என்ன? இப்படியான விவாகரத்துகள் தம்பதிகளிடையே அதிகரிக்க காரணம் என்ன? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தூக்க விவாகரத்து என்றால் என்ன?
தம்பதியினர் வெவ்வேறு அறைகளைப் பயன்படுத்தி தூங்குவது தான் ஸ்லீப் டைவர்ஸ் ஆகும். இது சட்டப்படி தம்பதிகள் விவாகரத்து பெற்றுக் கொள்வதைப் போன்றது அல்ல. பொதுவாக கணவன் மனைவி என்றால் ஒரே அறையில், பெட்டில் படுத்து உறங்குவார்கள். ஆனால், அதற்கு மாறாக வெவ்வேறு அறைகளில் படுத்து உறங்குவது ஸ்லீப் டைவர்ஸ் ஆகும். இப்போதெல்லாம், பெரும்பாலான தம்பதிகளில், இருவரும் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு வேலை அழுத்தம் அதிகமாக உள்ளது. ஓய்வுக்கான நேரம் குறைவாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், தூக்கமின்மையை தவிர்த்து நல்ல தூக்கம் வேண்டும் என விரும்புகிறார்கள். இதற்காக மனைவியிடம் அல்லது கணவனிடமிருந்து விலகி வேறு அறையில் படுத்து உறங்குவார்கள்.
இதுமட்டுமில்லாமல் ஒரே அறையில் இருந்தாலும் நீண்ட நேரம் மொபைலை பயன்படுத்திக் கொண்டு பார்ட்னரின் தூக்கத்தையும் கெடுப்பார்கள். இதற்காகவும் வேறு அறையில் படுத்து உறங்கும் பழக்கத்தை கடைபிடிப்பார்கள். சிலருக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் அடிக்கடி எழுந்திருப்பது மற்றவர்களின் தூக்கத்தைக் கெடுக்கும். தனித்தனியாக தூங்குவதும் இந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிப்பதாக அவர்கள் விரும்பலாம்.
மேலும், இப்போதெல்லாம் ஒவ்வொருவருக்கும் அவரவர் தனிப்பட்ட இடம் தேவைப்படுகிறது. தூங்குவதற்கு தனி அறைகளைப் பயன்படுத்துவது தம்பதிகளுக்கு தனிப்பட்ட இடத்தை அளிக்கிறது, இது அவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். வேலை இடத்தில் அதிக மன அழுத்தம் இருப்பவர்கள் வீட்டில் தனியாக உறங்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதை போல உணரலாம். அல்லது தனியாக தொந்தரவில்லாமல் தூங்கும்போது ரிலாக்ஸ் கிடைப்பதை போல உணரலாம்.
ஸ்லீப் டைவர்ஸ் நன்மை தீமைகள்
மன ஆரோக்கியத்திற்கு நல்ல தூக்கம் மிகவும் முக்கியம். ஸ்லீப் டைவர்ஸ் மூலம் தம்பதிகள் சிறந்த தூக்கத்தைப் பெறுகிறார்கள், இதன் காரணமாக அவர்கள் மேலும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மேலும், உடல் ஆரோக்கியத்திற்கும் நல்ல தூக்கம் மிகவும் அவசியம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அதிக பொறுமை மற்றும் உறவுகளில் சகிப்புத்தன்மை கொண்டவர்களாக மாற முடியும். அதேநேரத்தில் இதில் சில தீமைகளும் உள்ளன. ஸ்லீப் டைவர்ஸ், அதாவது தனித்தனியாக தூங்கும்போது உணர்ச்சி ரீதியாக விரிசலையும் சந்திப்பார்கள். நெருக்கம் குறையும்.
மேலும் படிக்க | அப்பா-மகன் எப்போதும் எலியும் பூனையுமாக இருப்பது ஏன்? காரணம் இதுதான்!
மேலும் படிக்க | தோல்வியை விரட்டி ஓட வைக்கும் 7 பழக்கங்கள்!! தினமும் பண்ணுங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ