Apple Cider Vinegar: ACV என்று அழைக்கப்படும் ஆப்பிள் சைடர் வினிகர், உடல் எடையை குறைப்பது முதல் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கான வீட்டு வைத்தியமாக பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிள் சைடர் வினிகரில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
ஆப்பிள் சைடர் வினிகரில் பாக்டீரியா எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. இது தவிர என்சைம்கள், வைட்டமின்கள், சிட்ரிக் அமிலம், அசிட்டிக் அமிலம், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்றவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கின்றன.
ஆப்பிள் சைடர் வினிகர் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தி, உடல் பருமனை குறைப்பது (Weight Loss Tips) முதல் பல வகைகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்ட இந்த பானம், சிறந்த டீடாக்ஸ் பானமாகும். மேலும், சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
ஆப்பிள் சைடர் வினிகர் தயாரிக்கப்படும் முறை
ஆப்பிள் சைடர் வினிகர் ஆப்பிள்களை ஈஸ்ட் மற்றும் பாக்டீரியாவுடன் புளிக்கவைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதன் காரணமாக அசிட்டிக் அமிலம் உருவாகிறது. இந்த அமிலம் ஆப்பிள் சைடர் வினிகருக்கு புளிப்பு சுவை மற்றும் வாசனையை அளிக்கிறது.
உடல் எடையை குறைக்க உதவும் ஆப்பிள் சைடர் வினிகர்
ஆப்பிள் சைடர் வினிகர் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், கடந்த சில வருடங்களாக உடல் எடையைக் குறைக்க அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆப்பிள் சைடர் வினிகரை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து பசியைக் குறைக்கிறது. இதனால், கொழுப்பு வேகமாக எரிக்கப்படுகிறது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
மேலும் படிக்க | கிட்னி - லிவரை காலி செய்யும் வலி நிவாரணிகள்... எச்சரிக்கும் மருத்துவர்கள்
ஆப்பிள் சைடர் வினிகரின் பக்க விளைவுகள்
இருப்பினும், ஆப்பிள் சைடர் வினிகர் அனைவருக்கும் பொருத்தமான பானமாக இருக்கும் என கூற முடியாது . எடை இழப்புக்கு ஆப்பிள் சைடர் வினிகரை எவ்வாறு குடிக்க வேண்டும், எந்த நேரத்தில் உட்கொள்ள வேண்டும், யாருக்கெல்லாம் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி உணவியல் நிபுணர்கள் கூறுவதை அறிந்து கொள்ளலாம்
ஆப்பிள் சைடர் வினிகர் குடிக்க வேண்டிய சரியான முறை
ஆப்பிள் சைடர் வினிகரை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளவது சிறந்த நேரமாகவும் முறையானதாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், அசிடிட்டி பிரச்சனை இருந்தால், மதிய உணவிற்கு முன் எடுத்துக் கொள்வது நல்லது.. இருப்பினும், உங்கள் உடலுக்கு அது ஒத்துக் கொள்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். ஆப்பிள் சைடர் வினிகரை குடிப்பதால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், உடனடியாக அதனை நிறுத்தி விடுவது நல்லது.
மருத்துவரின் ஆலோசனையின்றி அனைவரும் ஆப்பிள் சீடர் வினிகரை உட்கொள்வது நல்லதல்ல. உதாரணமாக, நீங்கள் கீல்வாதம், அமிலத்தன்மை, அல்சர் அல்லது பிற இரைப்பை பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருபவர்கள், ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது தவிர, கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களும் மருத்துவரின் ஆலோசனையின்றி இதை உட்கொள்ளக்கூடாது.
ஆப்பிள் சீடர் வினிகரை குறுகிய காலத்திற்கு உட்கொள்வது பாதுகாப்பானது தான். ஆப்பிள் சைடர் வினிகரை நீண்ட காலத்திற்கு அதிக அளவில் பயன்படுத்தினால் பல பக்கவிளைவுகளும் ஏற்படும். ஆப்பிள் சைடர் வினிகரை நீண்ட காலத்திற்கு தொடர்ந்து பயன்படுத்தினால் உடலில் பொட்டாசியம் சத்து குறையும். உடலில் அதிக கொழுப்பு, சிறுநீரக கற்கள் மற்றும் PCOS பிரச்சனை இருந்தால், ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்துக் கொள்வது பலன் அளிக்கும்.
மேலும் படிக்க | உஷார்! புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் இவைதான்.. அலட்சியம் வேண்டாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ