இந்திய கொரோனா தடுப்பூசிகளை உலகிற்கு வழங்கி உலகையே காப்பாற்றி வருகிறது என அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி டாக்டர் பீட்டர் ஹோடெஸ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை இந்தியா உலகிற்கு வழங்கி, உலகின் மருத்துவ மையமாக திகழ்கிறது என பாராட்டியுள்ளார்.
கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில், இந்தியா உலகிற்கு அளிக்கும் பங்களிப்பை நம்மால் எளிதில் மறக்கலாகாது என கூறும் அமெரிக்கா மருத்துவ விஞ்ஞானி பீட்டர் ஹோடெஸ், ஹூஸ்டன் பேயர் மருத்துவக் கல்லூரி டீன் ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உலகப்புகழ்பெற்ற மருத்துவ விஞ்ஞானியும் ஆவார்.
காணொலி காட்சி மூலம் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்ற போது இந்தக் கருத்தை தெரிவித்தார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா உலகிற்கு தடுப்பூசி (Corona Vaccine) வழங்கி உதவி வருவது என்பது மிகப்பெரிய உதவி. அது குறைத்து மதிப்பிடப்படுகிறது. அது தவறு, இன்று இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகள் உலகையே காக்கின்றன, அதை குறைத்து மதிப்பிடுவது தவறு என்று அவர் கூறினார்.
இந்திய-அமெரிக்க வர்த்தகக் கழகம் இந்த இணையவழி கருத்தரங்கத்தை கிரேட்டர் ஹூஸ்டனில் நடத்தியது. புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா தயாரித்த கொரோனா தடுப்பு கோவிஷீல்ட், பாரத் பயோடெக் நிறுவனமும் ஐசிஎம்ஆர் இணைந்து தயாரித்த கோவாக்சின், ஆகியவற்றை அவசர காலத்தில் பயன்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு கழகம் அனுமதியளித்துள்ளது.
ALSO READ | கொரோனாவை ஒழிக்க உலகிற்கு உதவும் இந்தியா: பிரதமர் மோடிக்கு WHO பாராட்டு
டாக்டர் ஹோடெஸ் தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் மிகவும் திறனையானவர் என்று கருதப்படுகிறது, இவர் இந்திய மருந்து நிறுவனங்களுடன் ஆய்வில் ஈடுபட்டு மலிவான விலையில் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உதவியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோவிட் 19 காலக்கட்டத்தில் உலகின் மருத்துவ மையமாக இந்தியா திகழ்கிறது. மருத்துவத்தில் இந்திய விஞ்ஞானிகளுக்கு இருக்கும் ஆழமான அறிவாற்றல் காரணமாக விரைவில் கொரோனா தடுப்பூடி கண்டுப்பிடிப்பது சாத்தியமானது என்றார் மருத்துவர் ஹோடஸ்.
மேட் இன் இந்தியா தடுப்பூசிகளுக்கான தேவை, தற்போது உலக நாடுகளிடமிருந்து மிகவும் அதிகரித்துள்ளது. பல நாடுகள் இந்தியாவை அணுகி, கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளை வழங்குமாறும் கோரி வருகிறது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Bharat Biotech: கோவாக்சின் 81% மருத்துவ செயல்திறனைக் காட்டுகிறது
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR