கோடை காலத்தில் புதிய மற்றும் ருசியான தர்பூசணிகள் சந்தையில் கிடைக்கின்றன. கோடைகாலத்தில் மக்கள் விரும்பி உண்ணும் பழங்களில் தர்பூசணி ஒன்றாகும். இதில் அதிக அளவு நீர் இருப்பதால், இந்த பழம் வெப்பத்திற்கு ஏற்றதாக இருக்கிறது. தர்பூசணி பழத்தில் அத்தியாவசிய வைட்டமின்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ஆரோக்கியத்தின் நன்மைகளைப் பெற, கோடைகாலத்தில் தர்பூசணி பழத்தை தினசரி உணவின் ஒரு பகுதியாக மாற்றுவது அவசியமாகும்.
தர்பூசணி பழத்தின் சில முக்கிய நன்மைகளை இங்கே பார்க்கலாம்:
இரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது- பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் தர்பூசணியில் காணப்படுகின்றன. இது இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது இரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது. ரசம் மிகுந்த பழத்தில் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. அவை இரத்த அழுத்தத்தை (Blood Pressure) சீராக வைத்திருக்கின்றன.
செரிமானத்தில் உதவுகிறது - தர்பூசணி நார்ச்சத்துகளால் நிரம்பியுள்ளது. இது உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. இதில் அதிக அளவு நீர் இருப்பதால், தர்பூசணி உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை அகற்ற மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
ஆற்றலை அதிகரிக்கிறது - கோடை காலத்தில் நாம் அனைவரும் மந்தமாகி விடுகிறோம். அசதி காரணமாக வேலை செய்ய ஆற்றல் இல்லாமல் போய் விடுகிறது. ஆனால், ஒரு கிளாஸ் தர்பூசணி (Watermelon) சாறு குடித்தால் போதும், நீங்கள் மிகப்பெரிய வித்தியாசத்தைக் காண முடியும். தர்பூசணியில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் தாது ஹைட்ரேட்டுகள் உடலுக்குத் தேவையான உற்சாகத்தையும் ஆற்றலையும் அளிக்கின்றன.
ALSO READ: தர்பூசணி சாப்பிட்ட பின் தோலை தூக்கி எறியாதீர்கள்; அதில் அவ்வ்வ்வளவு நன்மை இருக்கு
உடல் எடையை குறைக்கிறது- நீங்கள் வேகமாக உடல் எடையை குறைக்க (Weight Loss) விரும்பினால், தர்பூசணியை உங்கள் உணவின் ஒரு பகுதியாக ஆக்குங்கள். இதில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால், இதனை உண்பதால் வயிறு நிரம்பி விடுகிறது.
நீரிழிவு நோய், புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது- தர்பூசணியில் லைகோபீன் என்ற சக்திவாய்ந்த ஆண்டிஆக்சிடண்ட் உள்ளது. புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து உங்களைத் தடுக்க இது உதவுகிறது.
உங்கள் இதயத்திற்கு நல்லது - அமினோ அமிலங்கள் நிறைந்த தர்பூசணி உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. தர்பூசணி உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது.
ஆஸ்துமாவைத் தடுக்கிறது- பெண்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று ஆஸ்துமா. தினமும் தர்பூசணி சாறு குடிப்பதன் மூலம் இந்த நோய் அபாயம் வெகுவாக குறைகிறது.
ALSO READ: வேக வைத்த முட்டை சாப்பிட்ட பின் சாப்பிடவே கூடாத உணவுகள் எது தெரியுமா..!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR