பூண்டு நீர் - ஆரோக்கிய நன்மைகள்: தினமும் குடித்தால் கிடைக்கும் ஏகப்பட பலன்கள்

Garlic Water Health Benefits: பூண்டை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடுவது மட்டுமல்லாமல், அதன் தண்ணீர் குடிப்பதும் உடல் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்க உதவுகிறது

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 21, 2022, 02:17 PM IST
  • தினமும் ஒரு டம்ளர் பூண்டு தண்ணீர் குடித்து வந்தால், நமது ஆரோக்கியத்திற்கு அபரிமிதமான நன்மைகள் கிடைக்கும்.
  • பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
  • இவை பல நோய்களைத் தடுக்கின்றன.
பூண்டு நீர் - ஆரோக்கிய நன்மைகள்: தினமும் குடித்தால் கிடைக்கும் ஏகப்பட பலன்கள் title=

பூண்டு நீர் - ஆரோக்கிய நன்மைகள்: பூண்டு நமது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் பயனுள்ள உணவுப்பொருளாகும். இதில் பல வித மருத்துவ குணங்கள் உள்ளன. பூண்டு பல நோய்களைத் தடுக்க உதவுகிறது. பூண்டை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடுவது மட்டுமல்லாமல், அதன் தண்ணீர் குடிப்பதும் உடல் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்க உதவுகிறது. தினமும் ஒரு டம்ளர் பூண்டு தண்ணீர் குடித்து வந்தால், நமது ஆரோக்கியத்திற்கு அபரிமிதமான நன்மைகள் கிடைக்கும்.

பூண்டின் பண்புகள்

பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை பல நோய்களைத் தடுக்கின்றன. பூண்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் பி1, வைட்டமின் சி, வைட்டமின் பி6 போன்ற சத்துக்கள் இதில் ஏராளமாக உள்ளன. இதில் மாங்கனீஸ், கால்சியம் மற்றும் இரும்புச்சத்தும் நிறைந்துள்ளது.

வயிற்று உபாதைகளில் நன்மை பயக்கும்

பூண்டு வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும். பூண்டு தண்ணீர் குடிப்பது பல வயிற்று பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. வயிற்று வலி, வாயு, பிடிப்புகள், வீக்கம், அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து பூண்டு நிவாரணம் அளிக்கிறது. ஒருவருக்கு செரிமானம் தொடர்பான தொந்தரவு ஏற்பட்டால், அவர் தினமும் காலையில் பூண்டு தண்ணீரை உட்கொள்ள வேண்டும். பூண்டு தண்ணீர் குடிப்பதால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

மேலும் படிக்க | உடல் எடை அதிகரிக்காமல் இருக்க தக்காளி தெரஃபி! எடையை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய பழம் 

இதயத்திற்கு நன்மை பயக்கும்

பூண்டில் உள்ள கூறுகள் இரத்தத்தை மெல்லியதாக மாற்றும். இதனால், ரத்த ஓட்டம் நன்றாக நடக்கும். பல இதய நோய்களுக்கான காரணம் இரத்தம் தடித்தல் அல்லது உறைதல் ஆகும். பூண்டு நீரைக் குடிப்பதால் இரத்தம் மெலிந்து இதய நோய்கள் வருவதையும் குறைக்கிறது. இதில் இதயத்திற்கு நன்மை செய்யும் அல்லிசின் என்ற கலவை உள்ளது. இருப்பினும், இதய நோய்களில் மருத்துவரின் ஆலோசனை அவசியம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இது பூஞ்சை காளான் எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. பூண்டு தண்ணீரைக் குடிப்பதன் மூலம், சளி பிரச்சனையும் நீங்கும்.

எப்போது, ​​எப்படி குடிக்க வேண்டும்

இரண்டு கிளாஸ் தண்ணீரில் இரண்டு மூன்று பூண்டு பற்களை போட்டு நன்றாக சூடாக்கி, தண்ணீர் பாதியாகும் வரை கொதிக்க வைக்கவும். இந்த வழியில் பூண்டின் அனைத்து சத்துக்களும் தண்ணீரால் உறிஞ்சப்படும். ருசிக்கு ஏற்ப கருப்பு மிளகு மற்றும் கருப்பு உப்பு சேர்த்து இந்த தண்ணீரை குடிக்கலாம். இந்த சத்துள்ள நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது அதிக பலன் தரும். இதை காலை உணவுக்குப் பிறகு அல்லது மதிய உணவுக்குப் பிறகு குடிக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 20 நாளில் எடையை குறைக்க இந்த டயட் சாரட்டை ட்ரை பண்ணுங்க 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News