Benefits of eating Banana: வாழைப்பழம் தரும் நன்மைகள் குறித்து உணவு முறை நிபுணர் டாக்டர் ரஞ்சனாவிடம் பேசினோம். உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் கருத்துப்படி, தினமும் 1 வாழைப்பழம் சாப்பிடுவது பல நோய்களில் இருந்து உங்களை காப்பாற்றும். வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது, இது நமது தசைகளில் ஏற்படும் கிராம்பை தடுக்கும். வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் உள்ளது, இது நம் உடலை சுருசுருப்பாக வைத்திருக்க உதவும்.
வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்
வாழைப்பழத்தில் (Benefit of Eating Banana) உள்ள சத்துக்களைப் பார்த்தால், வைட்டமின்-ஏ, வைட்டமின்-பி மற்றும் மெக்னீசியம் தவிர, வைட்டமின்-சி (Vitamin C), பொட்டாசியம் மற்றும் வைட்டமின்-பி6, தயாமின், ரிபோஃப்ளேவின் போன்றவை உள்ளன. வாழைப்பழத்தில் 64.3 சதவீதம் தண்ணீர், 1.3 சதவீதம் புரதம், 24.7 சதவீதம் கார்போஹைட்ரேட் உள்ளது. இவை நாம் உடலுக்கு மிகவும் அவசியம்.
ALSO READ | Health Tips: மன அழுத்தத்தை விரட்டும் 6 பழங்கள்.!!
வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் (Amazing benefits of eating banana)
* வாழைப்பழத்தை உட்கொள்வதால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரித்து உடலின் வலிமையை அதிகரிக்கிறது.
* வாழைப்பழத்தில் உள்ள டிரிப்டோபான் அமினோ அமிலம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
* உடற்பயிற்சிக்கு 30 நிமிடங்களுக்கு முன் வாழைப்பழம் சாப்பிடுங்கள். இது உடற்பயிற்சிகளுக்கு ஆற்றலை வழங்குவது மட்டுமல்லாமல், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவியாக இருக்கும்.
* மாதவிடாய் காலங்களில் எரிச்சல் மற்றும் வலியைக் குறைக்க வாழைப்பழம் உதவியாக இருக்கும்.
* வாழைப்பழத்தில் போதுமான இரும்புச்சத்து உள்ளது, இது இரத்த சோகை அபாயத்தைக் குறைக்கிறது.
வாழைப்பழம் சாப்பிட சரியான நேரம்
வாழைப்பழம் சாப்பிட சரியான நேரம் காலை 8 மணி முதல் 9 மணி வரை ஆகும்.
(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.
ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR