ஸ்வீட் கார்ன் அல்லது மக்காச்சோளம் ஒரு சூப்பர்ஃபுட். இதில் வைட்டமின் B, தயாமின், நியாசின், பீட்டா கரோட்டீன், மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், துத்தநாகம், அஸ்கார்பிக் அமிலம், ஃபோலிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்களும், அமிலங்களும் நிறைந்துள்ளன. இதன் பெயர் ஸ்வீட் கார்ன் என்றாலும், இதில் சர்க்கரை மிக குறைவாகவே உள்ளது. 100 கிராம் சோளத்தில் 3 கிராம் சர்க்கரை மட்டுமே உள்ளது. சூப், சாலட், பாப்கார்ன் போன்ற பல வகைகளில் இதனை தயாரித்து சாப்பிடலாம்.
தினமும் 100 கிராம் ஸ்வீட் கார்னை உட்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்
நினைவாற்றல் பெருகும்
மக்காசோளத்தை உட்கொள்வது அறிவாற்றலை மேம்படுத்தி நினைவாற்றலை அதிகரிக்கும். அதிலும் வயதானவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் சோளத்தில் அதிக அளவு தயாமின் என்னும் வைட்டமின் பி1 உள்ளது. இது நம் உடலில் அசிடைல்கொலின் என்னும் நரம்பிய கடத்தையை தயாரிக்க அவசியம். அசிடைல்கொலின் என்பது ஒரு நரம்பியக்கடத்தி ஆகும். அசிடைல்கொலின் நினைவாற்றலை மேம்படுத்துவதால், முதுமையில் ஏற்படும் அல்சைமர் அபாயத்தைக் குறைக்கிறது. மக்காச்சோளம் சாப்பிடுவது நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது.
உடல் பருமனை குறைக்கும்
மக்காசோளத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் கொழுப்பு எரிக்கப்பட்டு உடல் எடை குறையும். எனவே இதனை உட்கொள்வதால் செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும், இதய நோய், பக்கவாதம், டைப்-2 நீரிழிவு நோய் மற்றும் குடல் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் குறைகிறது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மக்காச்சோளம் பசியைத் தணித்து, வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. எனவே இதை உட்கொள்வது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
கண் பார்வை கூர்மை
அடிக்கடி மக்காச்சோளம் சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்பார்வை கூர்மையாக இருக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். ஏனென்றால், இதில் கண் பார்வைத் திறனை அதிகரிக்கும் கரோடெனாய்டுகள், வைட்டமின் சி, ஈ உள்ளது.
இதய ஆரோக்கியம் மேம்படும்
உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவை அதிகம் உட்கொள்வதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். எனவே, நார்ச்சத்து நிறைந்த மக்காசோளத்தை உட்கொள்வது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து கொலஸ்ட்ராலை குறைக்கிறது. ஸ்வீட் கார்ன் எல்டிஎல் கொழுப்பைக் கட்டுப்படுத்தி, மாரடைப்பும் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
மேலும் படிக்க | ஒரே மாதத்தில் தொப்பையை கரைத்து எடையை குறைக்க... ஏலக்காயை இப்படி சாப்பிடுங்க
கர்ப்பிணிகளுக்கான சிறந்த உணவு
மக்காச்சோளத்தில் வைட்டமின் பி9 என்றும் அழைக்கப்படும் ஃபோலேட் நிறைந்துள்ளது. கர்ப்ப காலத்தில் ஃபோலேட் உட்கொள்வது இரத்த சிவப்பணுக்கள் உருவாவதற்கும் கருப்பையில் குழந்தையின் வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது. வெறும் 100 கிராம் ஸ்வீட் கார்னில் இருந்து 35 மைக்ரோகிராம் ஃபோலேட் கிடைக்கும்.
100 கிராம் மக்காச்சோளத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அளவு
கலோரிகள் - 86 கிலோகலோரி
கார்போஹைட்ரேட் - 18.70 கிராம்
புரதம் - 3.27 கிராம்
கொழுப்பு - 1.35 கிராம்
உணவு நார்ச்சத்து - 2 கிராம்
சோடியம்- 15 மி.கி
பொட்டாசியம்- 270 மி.கி
பீட்டா கரோட்டின் - 47 மி.கி.
மக்காச்சோளம் அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்
ஆரோக்கியமான உணவு என்ராலும், அளவிற்கு அதிகமாக உட்கொண்டால் பாதிப்பு ஏற்படும் என்பதால், அளவோடு தான் உண்ண வேண்டும். இதனை அளவிற்கு அதிகமாக உட்கொள்வதால் செரிமானம் பாதிக்கப்படும். வயிற்று உப்புசம் பிரச்சனை ஏற்படும். இதனை அதிகமாக உட்கொள்வதால் சிலருக்கு சரும பிரச்சனைகள் ஏற்படும். தோலில் தடிப்புகள் தோன்றலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ