வெங்காயம் மற்றும் பூண்டு தோலின் நன்மைகள்: இந்தியாவில் சமையலறையில் வெங்காயம் மற்றும் பூண்டு இல்லாத வீடுகளை காண முடியாது. இவை உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நமது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
பொதுவாக இவற்றின் தோலை நாம் தூக்கி எறிந்துவிடுகிறோம். எனினும், இவற்றின் தோலிலும் பல நன்மைகள் புதைந்துள்ளன என்பதை நாம் அறிவதில்லை.
வெங்காயம் மற்றும் பூண்டு தோலின் நன்மைகள்
வெங்காயம் மற்றும் பூண்டின் தோலில் முக்கியமாக சில நன்மைகள் உள்ளன. கூந்தலின் அழகை அதிகரிப்பது, உணவில் சுவை சேர்ப்பது போன்றவை இவற்றில் குறிப்பிட்டு கூற வேண்டியவையாகும். இவற்றை சரியான முறையில் பயன்படுத்துவது நம் வாழ்க்கையில் நமக்கு பல நன்மைகளை அளிக்கக்கூடும். வெங்காயம் மற்றும் பூண்டின் தோல் மூலம் நமக்கு கிடைக்கக்கூடும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேலும் படிக்க | நமக்கே தெரியாமல் நம்மை கொல்லும் நோய்., அதிர்ச்சியூட்டும் உண்மை.
1. கூந்தலுக்கு நல்லது
வெங்காயம் நம் தலைமுடிக்கு மிகவும் நன்மை பயக்கும். அதில் உள்ள கந்தகம் நம் தலைமுடியை பளபளப்பாக்குவதோடு, அவற்றை பலப்படுத்துகிறது. வெங்காயத் தோலில் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, தண்ணீரை ஆறவைத்து, தலைமுடிக்கு ஷாம்பு போட்டு இந்த நீரில் கழுவினால், கூந்தலுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
2. உணவில் சுவையை கூட்ட
உணவில் பூண்டைப் பயன்படுத்துவது உணவின் சுவையை அதிகரிக்கிறது. வெங்காயம், பூண்டு ஆகியவை மூலம் அனைத்து வித உணவின் சுவையும் அதிகரிக்கிறது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை வறுத்து பொடி செய்து, சமைக்கும் போது இந்தப் பொடியைச் சேர்த்துக் கொள்ளலாம். அதே போல் சாலட்டில் போட்டும் பயன்படுத்தலாம். இந்த பொடி உணவின் சுவையை அதிகமாக்கும்.
3. அரிப்பு பிரச்சனைக்கு நிவாரணம்
கால்களுக்கு இடையில் பலருக்கு அரிப்பு பெரும் பிரச்சனையாக இருக்கும். இந்த பிரச்சனை உள்ளவர்கள், வெங்காயம்-பூண்டு மூலம் நிவாரணம் பெறலாம். வெங்காயம் மற்றும் பூண்டை தோலுடன் தண்ணீரில் வேகவைத்து, அதே நீரில் உங்கள் கால்களை வைக்கவும். இப்படி செய்தால் சிறிது நேரத்தில் நிவாரணம் கிடைப்பதுடன் அரிப்பும் நீங்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவலளை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | White Hair: இந்த பச்சை காய்கறி உங்கள் வெள்ளை முடியை கருப்பாக்க உதவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR