தீபாவளி இனிப்புகளில் கலப்படத்தை அடையாளம் காண்பது எப்படி? FSSAI டிப்ஸ்

Food Adultration Deepavali Sweets: உணவில் கலப்படம் செய்வது என்பது உடல்நலனை கெடுப்பதாகும், கடையில் விற்கும் உணவுகளின் தரத்தை உறுதிப்படுத்துவது அவசியம் ஆகும்  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 12, 2023, 07:25 AM IST
  • பலகாரங்களில் கலப்படத்தை எப்படி கண்டறிவது?
  • கலப்பட உணவினால் ஏற்படும் பிரச்சனைகள்
  • எப்படியெல்லாம் உணவில் கலப்படம் செய்யலாம்
தீபாவளி இனிப்புகளில் கலப்படத்தை அடையாளம் காண்பது எப்படி? FSSAI டிப்ஸ் title=

தீபாவளி போன்ற பண்டிகைகளில், மக்கள் அதிக அளவில் இனிப்புகளை வாங்கி, ஒருவருக்கொருவர் பரிசளிக்கின்றனர். இதனால் இனிப்பு விற்பனை செய்ய்யும் வியாபாரிகளுக்கு லாபம் ஈட்ட நல்ல வாய்ப்பு உள்ளது. அதிக கிராக்கி மற்றும் அதிக லாபம் வேண்டும் என்ற பேராசை, போலி மற்றும் கலப்பட இனிப்புகள் விற்பனைக்கு வழிவகுக்கிறது. மாவுப்பொருட்கள், சர்க்கரை மற்றும் எண்ணெய் என அனைத்திலும் கலப்படம் செய்யப்படுவதாக சந்தேகம் எழுகிறது.

கலப்படம் என்றால் என்ன?
நாம் உண்ணும் உணவில் பயன்படுத்தப்பட வேண்டிய குறிப்பிட்ட பொருட்களுக்கு பதிலாக, வேறு ஏதேனும் பொருள்களை சேர்த்தலோ அல்லது தேவையான ஒரு பொருளை நீக்குதலோ ஆகும்.  உதாரணமாக பாலில் தண்ணீர், தேனில் சர்க்கரைப்பாகு, காபித்தூளில் புளியங்கொட்டை தூள் ஆகியவை கலப்படங்களைச் சொல்லலாம். இவ்வாறு கலப்படம் செய்வதால் உணவில் நமக்கு இயற்கையாக கிடைக்கும் உணவின் தரம் பாதிக்கப்படுகின்றது.

இனிப்புகள் மற்றும் திண்பண்டங்கள் பலகாரங்களில் கலப்படங்கள் செய்யப்பட்டடால் அது மிகப்பெரிய ஆரோக்கிய பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, தீபாவளி உட்பட பண்டிகைக் காலங்களில் போலீசார் மற்றும் உணவு மேலாண்மை அமைப்பினர், வியாபார நிறுவனங்களில் மேற்கொள்ளும் சோதனைகளில் ஏராளமான கலப்படங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

மேலும் படிக்க | தீபாவளிக்கு ரெடியாகும் இட்லி - குடல்கறி, சுடச்சுட ஆட்டுக்கால் பாயா - தமிழ்நாட்டில் மட்டும் அசைவம் ஏன்?

கலப்பட உணவின் பாதிப்புகள்

கலப்படம் செய்யப்பட்ட உணவுகளை உண்பது உணவை நஞ்சாக்கும். அழுகிய உலர்ந்த பழங்கள், மரத்தூள், சோள மாவு போன்ற தரமற்ற பொருட்கள் இனிப்புகளில் சேர்க்கப்படுகின்றன, அதே நேரத்தில் உலர் பழங்கள் தயாரிக்கும் போது, ​​மாவு மற்றும் காய்கறி நெய் போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. 

அதிலும் குறிப்பாக தீபாவளிக்கு தயாரிக்கப்படும் இனிப்புகளில் அலங்காரத்திற்கு செய்யப்படும் சில்வர் தாள்களுக்கு பதிலாக, அலுமினியம் பயன்படுத்தப்படுகிறது. இதேபோல், இனிப்புகளில் சவர்க்காரம், யூரியா, கலப்பட எண்ணெய், பயன்படுத்திய எண்ணெய் போன்றவையும் சேர்க்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட இனிப்புகளை உண்பதால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். 

வயிற்று வலி, வாந்தி தவிர, ஒவ்வ்வாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்கவும் அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்தியாவில் மிகவும் பொதுவாக கலப்படம் செய்யப்பட்ட பொருள் பால் மற்றும் பெரும்பாலான இனிப்புகள் பாலில் தயாரிக்கப்படுகின்றன. மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடைகளை ஆய்வு செய்து, மாதிரிகளை சேகரித்து தரத்தை சரிபார்க்கின்றனர். தர நிர்ணய விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  FSSAI இந்த ஆண்டு கண்காணிப்பு மாதிரிகளின் எண்ணிக்கையை 1 லட்சமாக உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | எண்ணெய் குளியலும் முடி பாதுகாப்பும்! தீபாவளி கங்கா ஸ்னானம் ஆச்சா? கூந்தல் வளர டிப்ஸ்

கலப்பட உணவை எப்படி கண்டறிவது? (Tips to check food adulteration at home)

இனிப்புகளில் கலப்படத்தை கண்டறியும் வழிகள்  
மாவுகளில் கலப்படத்தை அடையாளம் காண்பது அவசியமானது. அதேபோல, இனிப்பு பலகாரங்களில் 2-3 சொட்டு அயோடின் சேர்க்கவும். இனிப்பின் நிறம் மாறினால் அது கலப்படத்தின் அறிகுறியாக இருக்கலாம். இனிப்புக்காக மாவா அல்லது கோயாவை வாங்கினால், அது மென்மையாகவும், அதிக பசைத்தன்மையுடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தானிய அல்லது உலர்ந்த அமைப்பு கொண்ட கோயாவில் கலப்படம் இருக்கலாம்.

செயற்கை நிறமிட்ட இனிப்புகளை கண்டறிதல்
செயற்கை நிறமிட்ட இனிப்புகளை அடையாளம் காண, இனிப்புத் துண்டை எடுத்து, சில நிமிடங்களுக்கு உங்கள் கையில் வைக்கவும். இனிப்பின் நிறம் உங்கள் கைகளில் பட்டால், அந்த இனிப்பை வாங்காதீர்கள்.

இனிப்புகளில் கலப்படம்
இனிப்பை வாங்கும் முன் சுவைக்க வேண்டாம். இனிப்பு மிகவும் பழையதாக இருந்தால் அதன் சுவை மாறியிருக்கலாம். இதேபோல், பழைய இனிப்புகள் உலர்ந்து காணப்படும்.  

மேலும் படிக்க | தீபத் திருநாளில் ஒளிர்ந்த அயோத்தி! 22.23 லட்ச தீபங்கள் ஏற்றி கின்னஸ் சாதனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News