Rapid Weight Loss : இந்த டிஜிட்டல் உலகில் உடற்பயிற்சி செய்யவும், தன்னை தானே பார்த்துக்கொள்ள நேரமின்றியும் பலர் சுற்றுகின்றனர். அப்படி உடற்பயிற்சி செய்ய நேரமில்லாமல் இருப்பவர்கள் தினமும் 5 நிமிடம் நடைப்பயிற்சியாவது செய்யலாம் என நினைக்கின்றனர். தினமும் 5 நிமிடம் வாக்கிங் செய்வதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
இதய ஆரோக்கியம்:
சமீப காலமாக இதய நோய் பாதிப்புகள் உலகம் முழுவதும் அதிகரித்திருக்கிறது. இதை தவிர்க்க கார்டியோ உடற்பயிற்சிகளை செய்ய வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். இது, சிறந்த மூச்சு பயிற்சியாக அமையும். இதை செய்வதால், அதிக ரத்த அழுத்தம் குறைந்து உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவும் குறையும். இது, இருதய அபாயத்தை குறைக்க உதவும்.
தசைகளை வலிமையாக்கும்:
தினமும் வாக்கிங் பயிற்சி மேர்கொள்வது, நமது எலும்பு மற்றும் தசைகளை வலுப்படுத்த உதவும். இதனால் உடலில் இருக்கும் கொழுப்பு கரைந்து, பாடி ஃபேட்டும் குறையும். கொலஸ்ட்ரால் குறைவதால் உடலில் மெட்டபாலிசமும் அதிகரிக்கும்.
எடையை பராமறிக்க உதவும்:
எடை பராமறிப்பிற்கு உதவுகிறது, வாக்கிங். தினமும் நடைப்பயிற்சி செய்வதால் கொழுப்பு எரிந்து, உடலில் அதிகமாக தங்கியிருக்கும் கொலஸ்ட்ரால்கள் குறைகின்றது. இது, எடை இழப்பிற்கும் காரணமாக அமைகிறது. இதனால் மெட்டபாலிசம் அதிகரிப்பதால் வாக்கிங் பயிற்சி முடித்த பிறகும் கூட, கலோரிகள் குறையுமாம். இது, உடலில் இருக்கும் பசி ஹார்மோன்களையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
மன அழுத்தத்தை குறைக்கும்:
தினமும் 5 முதல் 30 நிமிடங்கள் வரை வேகமாக நடைப்பயிற்சி மேற்கொள்வதால் நம் உடலில் இருக்கும் கோர்டிசாலின் அளவு குறைகிறது. இதனால், மன அழுத்தம் கொடுக்கும் ஹார்மோன்களின் செயல்பாடும் குறைவதாக கூறப்படுகிறது. மகிழ்ச்சி ஹார்மோன் என கூறப்படும் எண்ட்ரோஃபினின் அளவும் சுரக்கிறது. இதனால் மனதும் உடலும் ரிலாக்ஸ் ஆகிறது.
மனதை ஒருமைப்படுத்த உதவும்:
மனதை ஒருநிலைப்படுத்தி, நம் கற்பனை திறனை தூண்டுவதற்கு, தினமும் நடைப்பயிற்சியினை மேற்கொள்ளலாம். கலை மற்றும் திரைத்துறையில் இருப்பவர்கள் இதனால்தான் தினமும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றை செய்கின்ரானராம். நடைப்பயிற்சி செய்வது, நம் மூளைக்கு செல்லும் ரத்த ஓடத்தை அதிகரிப்பதால் இந்த மாற்றம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
தூக்கம்:
மனிதனுக்கு தேவையான விஷயங்களுள் ஒன்று தூக்கம். தினமும் தங்கு தடையற்ற தூக்கத்திற்கு 5 முதல் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தினமும் உறங்க செல்வதற்கு முன்பு, வாக்கிங் செய்யலாம். இதனால், நம் தூக்க நிலை அதிகரித்து தசைகள் நல்ல ஓய்வு பெறும் அளவிற்கான தூக்கத்தை இது வழங்குகிறது. இதனால், உடல் மற்றும் மன அழுத்தம் குறைந்து நம் உடலின் சர்காடியன் ரிதம் சரியாக இயங்கும் என ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
நாள்பட்ட நோய் பாதிப்பு:
நாள்பட்ட நோய் பாதிப்புகளை குறைக்க, தினமும் நடைப்பயிற்சிகளை செய்யலாம் என கூறுகின்றனர் மருத்துவர்கள். நடைப்பயிற்சியால் ரத்த அழுத்தம் குறைந்து கொலஸ்ட்ராலின் அளவும் குறைகிறது. இதவே பல்வேற் நாள்பட்ட நோய் பாதிப்புகளுக்கு காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | இந்த இடங்களில் வலி இருந்தால் ஜாக்கிரதை: கொலஸ்ட்ரால் அதிகமாகுது!!
எனர்ஜி அதிகரிக்கும்:
உடல் நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது நடைப்பயிற்சி. மனதையும் மூளையையும் பாதிக்கும் விஷயங்களை நடைப்பயிற்சி தவிர்ப்பதால் இது நிகழ்கிறதாம்.
செரிமான கோளாறு:
செரிமான கோளாறுகளை குறைக்க, சாப்பிட்டவை எளிதில் ஜீரணமாக வாக்கிங் பயிற்சொ மேற்கொள்ளலாம். வாக்கிங் பயிற்சி மேற்கொள்ளும் நாட்களிலும் புரத உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
மூளை திறன்:
மூளையின் திறன்களை அதிகமாக்கவும் தினமும் நடைப்பயிற்சயை மேற்கொள்ளலாம்.
மேலும் படிக்க | பற்களை நறநறன்னு கடிக்காதீங்க! ‘இந்த’ ஆபத்தான 5 பிரச்சனைகள் வரலாம்..
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ