மீன்பிடித் தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமல்!

தமிழகம் முழுவதும் இன்று நள்ளிரவு முதல் கடலில் மீன்பிடிக்க தடைகாலம் துவங்குகிறது..! 

Last Updated : Apr 14, 2018, 11:36 AM IST
மீன்பிடித் தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமல்!  title=

தமிழகம் முழுவதும் இன்று நள்ளிரவு முதல் கடலில் மீன்பிடிக்க தடைகாலம் துவங்குகிறது..! 

இது தொடர்பாக பேசிய மீன்வளதுறை அதிகாரி:- இந்தாண்டின் மீன்பிடி தடை காலமானது இன்று நள்ளிரவு 12 மணியில் இருந்து அமலுக்கு வருகிறது. அன்றிலிருந்து மீன்பிடிக்க செல்ல மீனவர்களுக்கு அனுமதி இல்லை. மீன்பிடிக்க டோக்கன் வழங்கப்படமாட்டாது என்றும் கூறினார். 

முன்னதாக, ஆண்டு தோறும் ஏப்ரல் 14-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை மீன்பிடித் தடைகாலமாக வங்காள விரிகுடா கடல் பகுதியில் அரசு உத்தரவின் பேரில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கணக்கில் கொண்டும், கடல் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கிலும், சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மீன்பிடித் தடைக்காலம் வருகிற இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது. இதையடுத்து, தொடர்ந்து இரண்டு மாதம் மீனவர்களுக்கு வருவாய் குறைவதை ஒட்டி மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். 

Trending News