இந்து மதத்தை விமர்சித்ததா மூக்குத்தி அம்மன்? படத்தில் காட்டப்பட்ட போலி சாமியர் யார்?

"மூக்குத்தி அம்மன்" திரைப்படத்தில் மதத்தை வைத்து போலி சாமியர்கள் செய்யும் அட்டகாசங்களை தோலூரித்து காட்டப்பட்டு உள்ளது 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 27, 2020, 01:51 PM IST
இந்து மதத்தை விமர்சித்ததா மூக்குத்தி அம்மன்? படத்தில் காட்டப்பட்ட போலி சாமியர் யார்? title=

"மூக்குத்தி அம்மன்" திரைப்படத்தில் மதத்தை வைத்து போலி சாமியர்கள் செய்யும் அட்டகாசங்களை தோலூரித்து காட்டப்பட்டு உள்ளது என்றாலும், மறுபுறம்,  இந்த படத்தில் முழுக்க முழுக்க இந்து மதத்தை மட்டுமே விமர்சித்திருப்பதாகவும் குற்றசாற்று எழுந்துள்ளது.

RJ பாலாஜி - NJ.சரவணன் ஆகியோரின் கூட்டு இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'மூக்குத்தி அம்மன்' (Mookuthi Amman). இப்படத்தில் ஊர்வசி, மெளலி, RJ. பாலாஜி (RJ Balaji) ஆகியோருடன் முதன் முறையாக அம்மன் கெட்டப்பில் நயன்தாரா (Nayanthara) நடித்துள்ளார். இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஹாட் ஸ்டார் OTT தளத்தில் தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மதத்தை வைத்து போலி சாமியர்கள் செய்யும் அட்டகாசங்களை தோலூரித்து காட்டும் விதமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது. இதில் முழுக்க முழுக்க இந்து மதத்தை மட்டுமே விமர்சித்திருந்ததாகவும், கிறிஸ்துவ மதம் குறித்து விமர்சிக்கும் காட்சிகள் நீக்கப்பட்டது பெரும் விமர்சனத்தை உருவாக்கியது. இதனிடையே இந்து தமிழர் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் இந்துமத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவதாகவும், இந்து மத சாமியார்களை வில்லன்கள் போல் படத்தில் சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

Nayanthara indeed looks beautiful...

ALSO READ | அம்பலமான உதயநிதி - நயன்தாரா இடையில் இருந்த ரகசிய உறவு..!

TRENDING: RJ Balaji Opens Up On Mookuthi Amman 2! | JFW Just for women

இதனால் இந்து கடவுள் குறித்து அவதூறாக படமெடுத்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்பட காட்சிகளை நீக்க வேண்டும். அந்தப் படத்தின் தயாரிப்பாளரை திருப்பதி தேவஸ்தான ஆலோசனை கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். மேலும், படக்குழுவினர் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நிஜக்கடவுளுக்கும், மனிதனால் உருவாக்கப்பட்ட கடவுளுக்கும் இடையிலான மோதலை நகைச்சுவையுடன் படம் வர்ணித்திருந்தாலும், இந்து மதம் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது பலரும் வருத்தப்பட வைத்துள்ளது.

இதற்கிடையில், இப்படத்தை பார்த்த அனைவரின் மனதிலும் ஒரு கேள்வி எழுந்திருக்கும். இந்த திரைப்படத்தில் நயன்தாராவும், RJ. பாலாஜியும் இணைந்து யாரை விமர்சனம் செய்துள்ளனர். இந்தியாவில் மதக்குருமார்கள் பலர் இருந்தாலும், யாரை குறித்து பேசியிருக்கிறார்கள் என்ற குழப்பம் இயல்பாகவே ஏற்படுகிறது. படத்தில் இந்துமத கடவுளின் தூதராக சித்தரிக்கபட்ட அஜய் கோஷ் செய்யும் செயல்கள் அனைத்தும், நமக்கு நன்கு பரிச்சையமான சில சாமியார்களின் முகத்தை நினைவுப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. உண்மையில் இந்த படத்தில் நயன்தாராவும், RJ. பாலாஜியும் குலதெய்வத்தின் மகிமையையும், இறைவனுக்கும் நமக்கும் இடையில் எந்த தூதுவரும் தேவையில்லை என்பதை ஆணித்தனமாக உணர்த்தி உள்ளனர். இறைவனிடம் நேரடியாக உங்கள் வேண்டுதல்களை கூறினால் கண்டிப்பாக அவர் நமக்கு நல்லவழி காட்டுவார் எனவும், இறைவனின் பெயரை கூறி பணம் சம்பாதிக்கும் சாமியார்களின் வளர்ச்சியை தடுக்கலாம் என தெள்ளத்தெளிவாக உணர்த்தியுள்ளனர். 

Trending News