Psychological Tricks To Make People Like You : பிறருக்கு நம்மை பிடிக்க நாம் சில விஷயங்களை செய்ய வேண்டி இருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?
Psychological Tricks To Make People Like You : பிறருக்கு நம்மை பிடிக்க வேண்டும் என்றால், நாம் அதற்கென்று தனியாக சில விஷயங்களை செய்ய வேண்டும். அவை, மிகப்பெரிய விஷயங்கள் எல்லாம் இல்லை. தினசரி செய்யக்கூடிய மிக சிறிய விஷயங்கள்தான். அவை என்னென்ன தெரியுமா?
ஒருவர் உங்களிடம் பேசும் போது, உங்கள் முழு கவனத்தையும் அவரிடம் கொடுத்து, அவர் கூறுவதை கேட்பது ஒரு நல்ல குணமாகும். இதை வளர்த்துக்கொண்டாலே அனைவருக்கும் உங்களை பிடிக்கும்.
பார்த்தவுடன் ஒருவரை வசீகரிக்க செய்வது, நமது புன்னகைதான். எனவே, உங்களை ஒருவர் கண்ணோடு கண் பார்த்தால் அவரை பார்த்து சின்னதாக புன்னகை செய்யுங்கள்.
பிறரிடம் கனிவாக நடந்து கொள்வது, உங்களை பெரிய மனிதராக ஆக்காது. ஆனால், நல்ல மனிதராக காண்பிக்கும். எனவே, முடிந்த அளவு பிறரிடம் பெரிதாக கோபம் கொள்ளாமல், கனிவாக பேசி-பழக கற்றுக்கொள்ளுங்கள்.
ஒருவரை இன்னொருவர் புரிந்து கொண்டால் மட்டுமே, ‘பிடித்தம்’ என்ற விஷயம் வரும். எனவே, பிறர் அவர்களின் உணர்வுகளை பகிரும் போது அதை நன்றாக புரிந்து கொள்ள மனதை திறந்து வைத்திருக்க வேண்டும்.
ஒருவரை பாராட்ட விரும்பினால், மனதில் எந்த சஞ்சலமும் வைத்துக்கொள்ளாமல், முழு மனதுடன் அவரை பாராட்ட வேண்டும். இதனால், உங்களை பிறருக்கு பிடிக்க ஆரம்பிக்கும்.
நீங்கள் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு உங்களை பிடிக்க வேண்டும் என்று நினைத்தால் அவர்களின் உடல் மொழியை நீங்களும் ஃபாலோ செய்யுங்கள்.
உண்மையாகவே அவர்களை பற்றியும், அவர்களின் வாழ்வை பற்றியும் தெரிந்து கொள்ளும் எண்ணத்தோடு அவர்களை பற்றிய கேள்விகளை, அவர்களிடமே கேட்க வேண்டும்.
ஒருவரை நீங்கள் இம்ப்ரஸ் செய்ய வேண்டும் என்றால், அவரிடம் நீங்கள் அட்வைஸ் கேட்கலாம். இதனால், அவர்கள் மதிப்புக்குரிய நபராக உணருவர். அந்த உணர்வை கொடுத்த உங்களை அவர்களுக்கு பிடிக்க ஆரம்பித்து விடும்.