இன்று குஜராத்தை உலக நாடுகள் திரும்பி பார்க்கின்றன: மோடி....

சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்காக நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்!!

Last Updated : May 26, 2019, 08:37 PM IST
இன்று குஜராத்தை உலக நாடுகள் திரும்பி பார்க்கின்றன: மோடி....  title=

சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்காக நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்!!

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தனது சொந்த ஊரான குஜராத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அப்போது கட்சியின் தலைவர் அமித் ஷா உடனிருந்தார். இதையடுத்து, அகமதாபாத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் நன்றி அறிவிப்பு  கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. அப்போது கூடத்தில் தொண்டர்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி; சூரத் தீவிபத்து பெரும் சோகத்தை அளித்துள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்துடன் உடன் இருக்கிறேன். மாநில அரசுடன் தொடர்பில் உள்ளேன். பாஜக வின் வெற்றியை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். மக்களின் ஆசியே எனது பலம். தொண்டர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் கடின உழைப்பினால் வெற்றி கிடைத்துள்ளது. குஜராத் எப்போதும் எனக்கு துணை நிற்கிறது. பாஜக அலுவலகத்தில் பல மணி நேரம் பணியாற்றியுள்ளேன். பல விஷயங்களை கற்று கொண்டுள்ளேன். போராடுவதற்கு இங்கு தான் கற்று கொண்டேன். 

குஜராத்தை உலக நாடுகள் திரும்பி பார்க்கின்றன. தொழிற்சாலைகள் இங்கு அதிகளவில் உருவாக்கப்பட்டுள்ளன. பாஜக ஆட்சியில் மாநிலம் வளர்ந்துள்ளது. மாநிலத்திற்கு வலிமையான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிக்கான பயணம் இங்கு தான் துவங்கியது. 2014 ஆல் இங்கிருந்து வேதனையுடன் கிளம்பி சென்றேன். குஜராத் மாடல் பல அதிர்வுகளை உண்டாக்கியது. எனது கடமையை முழுமையாக நிறைவேற்ற முயற்சி செய்வேன். மே.வங்கத்தில் மம்தா ஆட்சியின் கீழ் பயம் கலந்த சூழ்நிலை உருவாகியுள்ளது.

தேர்தல் கணிப்புகளை பொய்யாக்கியுள்ளோம். பாஜக 300 மேல் இடங்கள் கிடைக்கும் எனக் கூறியதை கிண்டல் செய்தனர். அனைத்து சாதனைகளையும் பாஜக முறியடித்துள்ளது .பாதுகாப்புக்காகவும் வளர்ச்சிக்காகவும் மக்கள் ஓட்டளித்துள்ளனர். நமக்காக மக்கள் போராடியுள்ளனர். 300 இடங்களுக்கும் மேல் அளித்துள்ளனர். வெற்றி நம்மை பெருமைபடுத்தியுள்ளது . வலிமையான அரசு அமைய மக்கள் ஓட்டளித்துள்ளனர். அடுத்த 5 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது. தற்போது கடமை அதிகரித்துள்ளது. இது மக்களின் தேர்தல், பாஜக-வின் தேர்தல் அல்ல" இவ்வாறு அவர் கூறினார்.

 

Trending News