மோடியின் புதிய அமைச்சரவையில் JDU-க்கு இடம் இல்லை...

புதிதாக அமையவுள்ள மத்திய அமைச்சரவையில் நிதிஷ் குமாரின் JDU-வுக்கு இடம் அளிக்கப்படவில்லை என அக்கட்சி தலைவர் நிதிஷ் குமார் உறுதிபடுத்தியுள்ளார்!

Last Updated : May 30, 2019, 07:03 PM IST
மோடியின் புதிய அமைச்சரவையில் JDU-க்கு இடம் இல்லை... title=

புதிதாக அமையவுள்ள மத்திய அமைச்சரவையில் நிதிஷ் குமாரின் JDU-வுக்கு இடம் அளிக்கப்படவில்லை என அக்கட்சி தலைவர் நிதிஷ் குமார் உறுதிபடுத்தியுள்ளார்!

மோடியின் பதவியேற்பு விழாவிற்கு 30 நிமிடங்கள் முன்னதாக இந்த தகவலை உறுதி படுத்தியுள்ளார் நிதிஷ் குமார். பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவிற்கு செல்வதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நிதிஷ் குமார் தெரிவிக்கையில் "பாஜக-விடம் இருந்து தங்களுக்கு அமைச்சர் பதவி குறித்த குறியீடு தெரிந்ததாகவும், பின்னர் தங்கள் கட்சி தரப்பில் இருந்தே தங்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டாம்" என கேட்டுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடந்து முடிந்த 17-வது மக்களவை தேர்தலில் ஆளும் பாஜக 303 இடங்களில் வெற்றிபெற்று தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இதன் மூலம் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடி, இன்று இந்திய நாட்டின் பிரதமராக பதவி ஏற்றுக்கொள்கிறார். அவருடன் மத்திய அமைச்சரவையில் இடம் பெற உள்ள அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக மோடி அரசாங்கத்தில் நிதி அமைச்சராக செயல்பட்டு வந்த அருண் ஜெட்லி, கடந்த ஒன்றை வருடமாக  கடுமையான உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதனையடுத்து முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, "தனது உடல்நிலையை காரணம் காட்டி, தற்போது அமையுள்ள மோடி அமைச்சரவையில் தன்னால் இடம் பெற்று கடமைகளை ஆற்ற இயலாது" எனக் கூறி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதனைதொடர்ந்து, மோடி அமைச்சரவையில் அடுத்த நிதி அமைச்சர் யார்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. நிதி அமைச்சர் என்பது மிக முக்கிய பொறுப்பு என்பதால், தனக்கு மிகவும் நெருங்கியவர்களையே அந்த பதவியில் அமர வைப்பார் மோடி. அருண் ஜெட்லி மோடியின் மிக நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் புதயி அமைச்சரவையில் நிதிஷ் குமாரின் JDU-வுக்கு இடம் அளிக்கப்படவில்லை என அக்கட்சி தலைவர் நிதிஷ் குமார் உறுதிபடுத்தியுள்ளார்.

Trending News