சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்துவோம் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!!
மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை பாரதீய ஜனதா (BJP) செயற்குழு ஜே.பி.நட்டா மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டனர். மும்பையின் பாந்த்ரா-வெஸ்டில் உள்ள ரங்கசர்தா ஆடிட்டோரியத்தில் 'சங்கல்ப் பத்ரா' என்ற தலைப்புடைய அறிக்கைய வெளியிட்டனர்.
மகாராஷ்டிரா சட்டசபைக்கான தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து மும்பையில் இன்று பாஜகவின் தேர்தல் அறிக்கையை அதன் செயல் தலைவர் ஜேபி நட்டா, மகாராஷ்டிரா முதல்வர் ஜேபி நட்டா ஆகியோர் வெளியிட்டனர். அந்த அறிக்கையில் சமூக நீதிப் போராளி ஜோதிபாபூலே, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ர்ரிபாய் பூலே மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகி வீர சாவர்க்கர் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:-
> இந்தியாவின் மிக உயர்ந்த சிவில் விருது, பாரத் ரத்னா, ஜோதிராவ் கோவிந்திராவ் பூலே, சாவித்ரிபாய் பூலே, மற்றும் விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டும்.
> சானிடரி நாப்கின் ரூ .1 / - மலிவான விலையில் பெண்களுக்கு சுகாதார நாப்கின்களை உறுதியளித்தல்.
> அரசு மருத்துவமனைகள் அதிகரிக்க நடவடிக்கை மற்றும் சிறந்த ஆயுர்வேத சிகிச்சை வசதிகள்.
> ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு யோகா மையம்.
> ஒவ்வொரு மாவட்டத்திலும் விஞ்ஞான மனநிலையை வளர்ப்பதற்கு ஒரு விஜியன் கேந்திரா இத்துறை.
> உள்கட்டமைப்பில் முதலீடு செய்ய ரூ .5 லட்சம் கோடி நிதி.
> அம்பேத்கர் நினைவு 2020-க்குள் முடிக்கப்பட உள்ளது.
> 5 ஆண்டுகளில் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும். பெண்கள் சிறுசேமிப்பு குழுக்களுடன் 1 கோடி குடும்பங்களை இணைப்பதன் மூலம் சிறப்பு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
> 2022 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகிக்கப்படும். இதற்காக மத்திய அரசுடன் இணைந்து ரூ. 5 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். மாநிலத்தின் அனைத்து சாலைகளையும் சீரமைத்து நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
> வரும் 5 ஆண்டுகளில் மகாராஷ்டிராவை வறட்சியின் பிடியில் இருந்து முழுமையாக மீட்போம். கோதாவரியில் இருந்து வறட்சி பாதித்த வடக்கு மராத்வாடா பகுதிக்கு ஆற்று நீரை திருப்பிவிடுவதற்கான நடவடிக்கைகள் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை தெரிவித்துள்ளனர்.