திமுக வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது - ஸ்டாலின்!

திமுக-வுக்கு கிடைக்க வேண்டிய வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!

Last Updated : Aug 2, 2019, 07:27 AM IST
திமுக வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது - ஸ்டாலின்! title=

திமுக-வுக்கு கிடைக்க வேண்டிய வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!

வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து ஆம்பூர் அருகே செங்கிலிகுப்பம் கிராமத்தில் வியாழக்கிழமை திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில்., தமிழகத்தில் தற்போதுள்ள பிரச்னைகளையும், தொகுதி பிரச்னைகளையும் பற்றி மக்களவையில் திமுக கூட்டணியைச் சேர்ந்த 38 MP-களின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அதுபோல கதிர் ஆனந்தின் குரலும் மக்களவையில் ஒலிக்க வேண்டும். பெரம்பலூர் தொகுதியில் கீர்த்தனா என்ற மாணவி நீட் தேர்வு பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி தற்போது வந்துள்ளது. 

கருணாநிதி முதல்வராக இருந்தபோதும், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் நீட் தேர்வு தமிழகத்துக்கு வரமுடியவில்லை. ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் நீட் தேர்வு வந்துள்ளது.

மருத்துவ நுழைவு தேர்வு நீட்-லிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற்றுத் தருகிறோம் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. ஆனால் அதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே பேரவையில் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானத்தை அவர் திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டார்.

முன்னதாக வேலூர் தேர்தல் பற்றி ஆம்பூரில் அனுமதியின்றி இஸ்லாமிய அமைப்பினருடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார் என புகார் எழுந்தது.  இந்த புகாரின்பேரில் அதிகாரிகள் சென்று மண்டபத்திற்கு சீல் வைத்தனர்.

மேலும் ஆம்பூரில் தனியார் மண்டபத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. வட்டாட்சியர் சுஜாதா கொடுத்த புகாரின் பேரில் ஆம்பூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Trending News