நாட்டிற்காக வாழ்கையை அர்ப்பணித்தால் தீவிரவாதியா? : கெஜ்ரிவால்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை “தீவிரவாதி” என பாஜக எம்.பி பர்வேஷ் வர்மா கடுமையாக விமர்சித்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்!!

Last Updated : Jan 30, 2020, 03:42 PM IST
நாட்டிற்காக வாழ்கையை அர்ப்பணித்தால் தீவிரவாதியா? : கெஜ்ரிவால்! title=

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை “தீவிரவாதி” என பாஜக எம்.பி பர்வேஷ் வர்மா கடுமையாக விமர்சித்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்!!

டெல்லி: 70 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கு வரும் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், களத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின்  தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மியின் சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க-ன் வேட்பாளராக இளைஞர் அணி தலைவர் சுனில் யாதவ், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணவர் அமைப்பின் டெல்லி தலைவரான ரொமேஷ் சபர்வால் ஆகியோர் போட்டியிடுவதால், அங்கு தலைவர்களின் பிரச்சாரம் களைகட்ட துவங்கியுள்ளது.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை “தீவிரவாதி” என பாஜக எம்.பி பர்வேஷ் வர்மா கடுமையாக விமர்சித்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கெஜ்ரிவால் கூறுகையில்; "நான் எப்படி தீவிரவாதியாக முடியும் என வாக்காளர்களிடம் கேள்வி எழுப்பினார். அவசர காலத்தில் உங்களுக்கு எவ்வளவோ செய்துள்ளேன். உங்களுக்கான மருந்து வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளேன்.." "இன்னும் எவ்வளவோ செய்துள்ளேன்.. நான் என்னை பற்றியும், எனது குடும்பத்தை பற்றியும் யோசித்தது இல்லை. நாட்டிற்காக எனது வாழ்கையை இழக்க தயாராக உள்ளேன்". 

நான் ஒரு நீரிழிவு நோயாளி, ஒரு நாளைக்கு 4 முறை அதற்காக இன்சூலின் எடுத்துக்கொள்கிறேன். மருத்துவர்கள் என்னை அரசியலில் தலையிட வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். நான் விரும்பினால், எனது நண்பர்களை போல் நானும் வெளிநாட்டிற்கு சென்றிருக்கலாம்.. நான் எனது வேலையை விட்டுக்கொடுத்தேன்.. ஒரு தீவிரவாதி இதை அனைத்தையும் செய்ய முடியுமா?. நான் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.. இதற்கு பின்னர் டெல்லி மக்களே நான் அவர்களது மகனா, சகோதரனா, அல்லது தீவிரவாதியா என்பதை முடிவு செய்து கொள்ளட்டும்" என அவர் கூறினார். 

ஷாகின்பாக்கில் CAA-க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் உங்கள் வீடுகளுக்குள் புகுந்து உங்கள் சகோதரிகளிடமும், மகள்களிடமும் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவார்கள் என்று கூறிய கருத்திற்காக பர்வேஷ் வர்மா மீது அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பர்வேஷ் கூறியதாவது, ஆம் ஆத்மி தலைவர் டெல்லி மக்களை முட்டாள் ஆக்குகிறார். அவர் பொய் சொல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளார் என்று கூறினார். 

அண்மையில் தேர்தல் கூட்டத்தில் பேசிய பர்வேஷ், டெல்லி ஷாகின்பாக் பகுதியில் லட்சக்கணக்காணோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் உங்கள் வீடுகளுக்குள் புகுந்து உங்கள் சகோதரிகளிடமும், மகள்களிடமும் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவார்கள். அதற்கு வாய்ப்புகள் உள்ளது, அப்போது, மோடிஜியும், அமித் ஷாவும் உங்களை காப்பாற்ற வரமாட்டார்கள். 

மேலும், ஷாகின்பாக்கில் போராட்டம் நடத்துபவர்கள் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தான் என்றும் அவர் கூறியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

 

Trending News