காஷ்மீர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு குழப்பமான செயலில் இறங்கியுள்ளது!
இந்திய வெளிநாட்டு காங்கிரஸின் தூதுக்குழு வியாழக்கிழமை இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கோர்பினை சந்தித்து காஷ்மீரில் ‘மனித உரிமை நிலைமை’ குறித்து விவாதங்களை நடத்தியது.
இந்திய வெளிநாட்டு காங்கிரஸ் பிரிட்டனின் தலைவர் கமல் தலிவால், இந்திய வெளிநாட்டு காங்கிரஸ் பிரிட்டனின் செய்தித் தொடர்பாளர் சுதாகர் கௌட் மற்றும் இந்திய வெளிநாட்டு செயலாளர் குர்மிந்தர் ரந்தவா ஆகியோரைக் கொண்ட ஒரு படத்தை பிரிட்டிஷ் தலைவர் ட்விட்டரில் பகிர்ந்த பின்னர் இந்த விவகாரம் இந்தியாவில் ஒரு அரசியல் சர்ச்சையைத் தூண்டியது.
Appalling! @INCIndia owes it to the people of India to explain what its leaders are telling foreign leaders about India.
India will give a befitting reply to Congress for these shameful shenanigans! https://t.co/Sb0MThF17A
— BJP (@BJP4India) October 10, 2019
இது குறித்து கோர்பின் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிடுகையில்., "இந்திய காங்கிரஸ் கட்சியின் இங்கிலாந்து பிரதிநிதிகளுடன் மிகவும் பயனுள்ள சந்திப்பு, அங்கு நாங்கள் காஷ்மீரில் மனித உரிமை நிலைமை பற்றி விவாதித்தோம். இப்பிரதேசத்தை இவ்வளவு காலமாக பாதித்த வன்முறை மற்றும் அச்சத்தின் சுழற்சிக்கு ஒரு விரிவாக்கம் மற்றும் முடிவு இருக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கூட்டத்திற்கு பாஜக, காங்கிரஸை விமர்சித்ததோடு அதை “பயங்கரமான செயல்” என்று குறிப்பிட்டுள்ளது. காஷ்மீர் குறித்து மற்ற நாடுகளின் தலைவர்களுக்கு அதன் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை காங்கிரஸ் இந்திய மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் பாஜக குறிப்பிட்டுள்ளது. "பயங்கரமானது! இந்தியாவைப் பற்றி அதன் தலைவர்கள் வெளிநாட்டுத் தலைவர்களிடம் என்ன சொல்கிறார்கள் என்பதை விளக்க காங்கிரஸ் இந்திய மக்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது. இந்த வெட்கக்கேடான, தீய நோக்குடன் பிறர் கவனத்தைத் திசை மாற்றும் காங்கிரஸ் தந்திரத்திற்கு இந்தியா பொருத்தமான பதிலை அளிக்கும்!” என்று பாஜக ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், காங்கிரஸ் செயலாளர் பிரணவ் ஜா முழு சர்ச்சையையும் குறைத்து மதிப்பிட முயன்றுள்ளார். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும், இந்த பிரச்சினை பேச்சுவார்த்தைக்குட்பட்டது அல்ல என்று கூறினார். அந்த கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை அறிய காங்கிரஸ் முயற்சிக்கிறது என்று ஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.