முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் சிறு விபத்தில் சிக்கியது...

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பலர் சென்ற ஹெலிகாப்டர் சறுக்கி விழுந்த நிலையில், பயணித்த அனைவரும் பத்திரமாக தப்பினர் என தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Oct 11, 2019, 08:16 PM IST
முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் சிறு விபத்தில் சிக்கியது... title=

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பலர் சென்ற ஹெலிகாப்டர் சறுக்கி விழுந்த நிலையில், பயணித்த அனைவரும் பத்திரமாக தப்பினர் என தகவல்கள் வெளியாகியுள்ளது!

முன்னதாக அகமதுநகர் மாவட்டத்தில் கோபர்கான், நியூசா மற்றும் கர்ஜாத் ஜம்கேட் ஆகிய இடங்களில் மகா ஜனதேஷ் சங்கல்ப சபைகளில் உரையாற்றிய பின்னர் பென்னில் நடைபெறவிருந்த பேரணியில் உரையாற்ற பட்னாவிஸ் வந்திருந்தார். இந்நிலையில் அவர் பயணித்த ஹெலிகாப்படர் தரையிரக்கதின் போது சறுக்கி விழ நேர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரிகள் கூற்றுப்படி, பட்னாவிஸை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஹெலிபேடில் தரையிறங்கிக் கொண்டிருந்தது, ஆனால் தரையில் ஈரமாக இருந்ததால் அது சறுக்கியது என கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் ஹெலிகாப்டர் மீதான கட்டுப்பாட்டை இழந்த விமானி, சில விநாடிகள் கழித்து ஹெலிகாப்டரை வெற்றிகரமாக தரையிறக்கினார் எனவும் கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் வரும் அக்., 21-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில், மாநிலத்தில் ஆளும் பாஜக மற்றும் சிவசேன கட்சியினர் கூட்டணி அமைத்து களம்காணுகின்றனர். 

பாஜக-சிவசேனா இடையேயான தொகுதி பங்கீடு விவகாரம் தொடக்கம் முதலே இழுபறியாகத்தான் இருந்த நிலையில், பாஜக கொடுத்த 124 தொகுதிகளை சிவசேனா ஏற்றுக் கொண்டது. 150 தொகுதிகளில் பாஜகவும் எஞ்சிய 14 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுகின்றன.

இத்தேர்தலில் உத்தவ் தாக்கரேவின் மூத்த மகன் ஆதித்யா தாக்கரே 'வொர்லி' தொகுதியில் முதல் முறையாக போட்டியிடுகிறார். 

பால்தாக்கரே குடும்பத்தில் இருந்து முதன் முதலாக தேர்தலில் போட்டியிடுகிறார் ஆதித்யா தாக்கரே. அதனால் சிவசேனா தொண்டர்கள், அவரை முதல்வர் வேட்பாளராக பார்க்கின்றனர். ஆனால் பாஜகவோ, எப்படியும் தனித்தே ஆட்சியை பிடிப்போம் என்கிற நம்பிக்கையில் உள்ளது. அந்த வகையில் மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Trending News