தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் பரபரப்பாக முழு வீச்சில் நடந்துகொண்டிருக்கின்றன. அனைத்து கட்சிகளும் மக்களைக் கவர பலவித புது முயற்சிகளையும் எடுத்து வருகின்றன. சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் தமிழகத்தின் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.
வாக்காளர்களைக் கவர வேட்பாளர்கள் செய்யும் வேலைகள் பல அனைவரையும் வியக்க வைக்கும் வண்ணம் உள்ளன. அவ்வகையில் வாக்கு சேகரிக்க சென்ற தேமுதிக வேட்பாளர் ஒருவரது செயலும் மக்களை வியப்பில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல், சிரிக்கவும் வைத்துள்ளது.
அமமுக தலைமையில் இம்முறை தேமுதிக (DMDK) தேர்தலை எதிர்கொள்கிறது. கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில், கரூர் தேமுதிக பொருளாளர் கஸ்தூரி தங்கராஜ் போட்டியிடுகிறார்.
கரூரில் வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில், அவர் பொது மக்களுக்கு சிக்கன் 65 தயார் செய்து கொடுத்து வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தார். இப்படிப்பட்ட வித்தியாசமான முறையில் வாக்கு சேர்கரித்த இவர் கரூர் தொகுதி முழுவதிலும் பரபரப்பான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
கரூரில் உள்ள வேலுச்சாமி புரம், வடிவேல் நகர், ரெட்டிபாளையம், ஆகிய பகுதிகளிலும் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அந்த பகுதிகளிலெல்லாம் வீடு வீடாக சென்று அவர் வாக்கு சேகரித்தார். வீடு வீடாக சென்று மக்களை சந்தித்த அவர், பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கினார். கடைவீதிகளுக்கும் சென்று வியாபாரிகளை சந்தித்தார்.
கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்காக தான் திட்டமிட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்த அவர், அங்குள்ள பிரியாணி கடை ஒன்றில் சிக்கன் 65 தயார் செய்த கொண்டிருந்த பெண்ணிடமும் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் தானே சிக்கன் 65-ஐ பொரிக்கத் தொடங்கினார்.
சிக்கன் 65-ஐ பொரித்ததோடு மட்டுமல்லாமல், பொரித்த சிக்கன் துண்டுகளை பொதுமக்களுக்கும் அவர் பரிமாறினார். இதனால் அங்கிருந்த மக்கள் ஆச்சரியத்தில் சிரிக்கத் தொடங்கினர். அஙு கூடிய மக்களிடம் அவர், தான் ஒரு எளிமையான வேட்பாளர் என்றும், தனக்கு ஒரே ஒருமுறை வாய்ப்பு அளித்து பார்க்குமாறும் கூறினார்.
நூதனமான முறையில் அவர் செய்த வாக்கு சேகரிப்பு (Campaigning) அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சிக்கன் 65 ஓட்டுகளாக மாறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe