பாஜக வெற்றியை துபாய், ஆஸ்திரேலியாவில் உள்ள பாஜக ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்.
BJP supporters celebrate in Dubai, United Arab Emirates. #ElectionResults2019 pic.twitter.com/nvv6rQK4Jm
— ANI (@ANI) May 23, 2019
BJP supporters celebrate in Perth, Australia. #LokSabhaElections2019 pic.twitter.com/0YZUh46Bx8
— ANI (@ANI) May 23, 2019
நாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது.
நடைப்பெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இன்று இரவுக்குள் தேர்தல் முடிவு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தற்போது வரை வெளியாகியுள்ள சுற்றின் முடிவுகளில் இந்தியா அளவில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது எனவும், தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
தற்போதைய நிலவரபப்டி நாடு முழுவதும் பாஜக கூட்டணி 300-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 100-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குல்பர்கா தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
பா.ஜ.க வேட்பாளர் மற்றும் மத்திய அமைச்சர் மானேகா காந்தி சுல்தான்பூரி தொகுதியில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. பீகார் பேகுசராய் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மூத்த தலைவரான கிரிராஜ் சிங் முன்னிலை வகிக்கிறார். அதே தொகுதியில் சிபிஐ சார்பில் போட்டியிட்ட கண்ணையா குமார் பின்னடைவு சந்தித்து வருகிறார். பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட நடிகர் சன்னி தியோல் குருதாஸ் பூர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.
மேலும் உ.பி.யில் உள்ள வாரணாசியில் தொகுதியில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து பிரதமர் மோடி முன்னிலை பெற்று வருகிறார். அதேபோல பாஜக தேசிய தலைவர் அமித் ஷா 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் குஜராத் காந்திநகர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். டெல்லியிலும் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாஜக 7 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
தற்போது வரை வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அந்தவகையில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக வெற்றியை துபாய், ஆஸ்திரேலியாவில் உள்ள பாஜக ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.