NEET, JEE Main 2020 Latest News: நீட், ஜேஇஇ தேர்வு 2020 ஐ ஒத்திவைக்க மாநில அரசுகள், பிற அரசியல் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசு இவ்வளவு பிடிவாதமாக ஏன் இருக்கிறது? என்று மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியம் சுவாமி (Subramanian Swamy) இன்று (செவ்வாய்க்கிழமை) கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில், தேர்வுகள் ஒத்திவைக்க உத்தரவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது. பிரதமர் மோடி இப்பொழுதே நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, நீட் / ஜேஇஇ (NEET/JEE Exam) தேர்வை ஒத்திவைக்க பல மாநில அரசுகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், கல்வி அமைச்சகம் ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறது? பிரதமர் மோடி (PM Modi) இப்பொழுதே தேர்வுகளை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ALSO READ | NEET, JEE தேர்வுகளை ஒத்திவைக்க பிரதமர் கல்வி அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும்: சுவாமி
With so many State Governments calling for postponement of NEET/JEE examination, and even Allen Coaching also, why the Ministry of Education being so obstinate PM Modi must take a call and order the postponement—now
— Subramanian Swamy (@Swamy39) August 25, 2020
ALSO READ | கொரோனாவை கட்டுப்படுத்தும் வரை Neet, JEE தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
முன்னதாக, தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளான NEET மற்றும் JEE நுழைவுத் தேர்வுகளை தீபாவளி வரை ஒத்திவைக்க கல்வி அமைச்சகத்திற்கு அறிவுறுத்துவதற்கு பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி (Subramanian Swamy) பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) தலையீட்டைக் கோரியுள்ளார். அப்படி நடக்கவில்லை என்றால் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என அவர் எச்சரித்திருந்தார்.
அதேபோல நாட்டில் கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றுநோய் கட்டுக்குள் வரும் வரை Neet மற்றும் JEE தேர்வைகளை ஒத்திவைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (M.K. Stalin) கோரிக்கை வைத்துள்ளார். அதுக்குறித்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.