சென்னை: 11ம் வகுப்பு மாணவ-மாணவிகள் தங்களது விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் விண்ணப்பங்களை இணையதளத்தில் இன்று பிற்பகல் 3 மணி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று தமிழக அரசு தேர்வு இயக்குநரகம் (Tamil Nadu Directorate of Government Examinations) அறிவித்துள்ளது.
மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்ட பின்னர் www.dge.tn.gov.in வலைத்தளத்திலிருந்து விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம். மறுமதிப்பீடு கூட்டலுக்கான விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களும், இதே இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாணவர்கள் தங்கள் விடைத்தாள் நகல் (Answer Scripts) மற்றும் மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்க விரும்பினால், அவர்கள் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2 வரை விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் மாவட்ட கல்வி அலுவலர் (District Educational Officer) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் அனைத்து பாடங்களுக்கும் மறுகூட்டலுக்கு செய்ய ரூ .505 மற்றும் ஒரு தாளை மறுகூட்டல் செய்வதற்கு ரூ .205 செலுத்த வேண்டும் (உயிரியல் (Biology) பாடத்திற்கு மட்டுமே ரூ .305 செலுத்த வேண்டும்). அவர்கள் அந்த தொகையை டி.இ.ஓ (DEO office) அலுவலகத்தில் செலுத்தலாம் (டி.டி எடுக்க தேவையில்லை).
ஜூலை 31 ஆம் தேதி TNDGE 11 ஆம் வகுப்பு தேர்வு (Class XI Exam Results) முடிவுகளை அறிவித்தது. தேர்வு எழிதிய 8,15,442 மாணவர்களில் 7,83,160 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96% ஆகும்.