Education: 2019-20 கல்வியாண்டில் தமிழகம் A ++ மதிப்பீடு பெற்று சாதனை

முதன்முறையாக, கடந்த 2019-ஆம் ஆண்டு, 2017-18 ஆம் ஆண்டுக்கான குறியீடு வெளியிடப்பட்டது. 2019-20 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் தரப்படுத்தல் பட்டியல் இது. இதில் தமிழகம் உயர்தர பட்டியலில் இடம்பிடித்துள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 6, 2021, 07:16 PM IST
  • 2019-20 கல்வியாண்டில் தமிழகம் A ++ மதிப்பீடு பெற்று சாதனை
  • செயல்திறன் தரப்படுத்தல் 70 பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது
  • 2019-ஆம் ஆண்டு முதல் இந்த தரப் பட்டியல் வெளியிடப்படுகிறது
Education: 2019-20 கல்வியாண்டில் தமிழகம் A ++ மதிப்பீடு பெற்று சாதனை title=

பள்ளிக்கல்வி செயல்திறன் தரப்படுத்தல் பட்டியலில் தமிழ்நாடு மிக உயரிய மதிப்பீடான ஏ++ பெற்று சாதனை படைத்துள்ளது.  

நாடு முழுவதும் பள்ளிக் கல்வித் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அளவிடுவதற்காக செயல்திறன் தரப்படுத்தல் குறியீட்டை அரசு அறிமுகப்படுத்தியது. இது 70 பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான செயல்திறன் தரப்படுத்தல் குறியீடு 2019-20ஐ வெளியிட மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’அனுமதி அளித்தார்.  

Also Read | Cancel NEET: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பிரதமருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

முதன்முறையாக, கடந்த 2019-ஆம் ஆண்டு, 2017-18 ஆம் ஆண்டுக்கான குறியீடு வெளியிடப்பட்டது. 2019-20 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் தரப்படுத்தல் பட்டியல் இது.

இப்படி பட்டியலிடுவதன் நோக்கம் என்ன? கல்வித்துறையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பல்வேறு முயற்சிகளின் மூலமாக மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மேற்கொள்ள இது வசதியாக இருக்கும்.

2019-20 ஆம் ஆண்டு தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாட்டைத் தவிர, பஞ்சாப், சண்டிகர், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களும் மிக உயரிய மதிப்பீடான ஏ++ ஐ பெற்றுள்ளன.

Also Read | தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2019-20 ஆண்டில் பெரும்பாலான மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்களது தர நிலையில் மேம்பட்டுள்ளன.

தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், ஆகியவை தங்களது ஒட்டுமொத்த குறியீட்டு மதிப்பெண்ணில் 10% அல்லது அதற்கும் மேற்பட்ட புள்ளிகளை கூடுதலாகப் பெற்றுள்ளன.

உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் என்ற பிரிவில் சுமார் 13 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் 10% வளர்ச்சியை அடைந்துள்ளன.  

ஆளுகை செயல்முறை என்ற பிரிவில் 19 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 10% வளர்ச்சியை எட்டியுள்ளன. அந்தமான் நிக்கோபார் தீவுகள், ஆந்திரப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் குறைந்தபட்சம் 20 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

Also Read | மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்: தமிழக அரசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News