சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் க்ரீமி லேயர் விதியை அமல்படுத்த கோரிக்கை..!!!

இட ஒதுக்கீட்டில் க்ரீமி லேயர் விதியை அமல்படுத்த வேண்டும் எனக் கோரி  சில தலித் மாணவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 29, 2020, 02:13 PM IST
  • இட ஒதுக்கீட்டில் பயன் பெற்று முன்னேறியவர்கள், அதே பிரிவில் உள்ள ஏழை மாணவர்களுக்கு வாய்ப்புகளை விட்டுத் தர வேண்டும்
  • இதனால், இட ஒதுக்கீட்டின் பலன்கள் ஒதுக்கப்பட்ட சமூகத்தினருக்கு முழுமையாக சென்று, ஒதுக்கப்பட்ட சமூகத்தினர் மத்தியில் உள்ள சமூக அநீதி ஒழிக்கப்பட்டு, சம வாய்ப்புகள் உருவாகும்
சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் க்ரீமி லேயர் விதியை அமல்படுத்த கோரிக்கை..!!! title=

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டில், தலை முறை தலை முறையாக பல அனுபவித்து முன்னேறியவர்கள் தான் தொடர்ந்து இட ஒதுக்கிட்டில் பயனடைந்து வருகின்றனர். இவர்களால் அப்பிரிவில் உள்ள ஏழை மாணவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்ற வாதம் கடந்த சில காலங்களாக வைக்கப்பட்டு வருகிறது. 

இது ஒதுக்கப்பட்ட சமூகத்தினர் மத்தியில் உள்ள சமூக அநீதி என பல குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையை கருத்தில் கொண்டு, ஒதுக்கப்பட்ட சமூகத்தில் உள்ள ஏழைகள் பயன்களை முழுதாக பெற வேண்டும் என்ற நோக்கில், ஒதுக்கப்பட்ட பிரிவை சேர்ந்த 25 வயதான விக்ரம் குமார் பாக்தே என்னுன் சட்டம் படிக்கும் மாணவர், இந்த ஆண்டு பிப்ரவரியில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறையில் 'கிரீமி லேயர்' அளவுகோல்களை அமல்படுத்த வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு கோரிக்கை மனுவை அனுப்பியிருந்தார்.

இந்த மாணவர் மாண்டசவுரில் உள்ள ராஜிவ் காந்தி கல்லூரியில் சட்ட படிப்பு படித்து வருகிறார். இவரது தந்தை ப்யூனாக வேலை செய்து வருகிறார்.

அதிலிருந்து அவருக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன, ஆனாலும் அவர் அஞ்சாமல், சமூக ஊடகங்கள் மூலம்  இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கொலை மிரட்டல் தொடர்பாக அவர் தனது சொந்த ஊரான நீமுச்சில் உள்ள ராம்புரா காவல் நிலையத்தில், புகார் அளித்துள்ளார்.

கேஸுக்கான மானியம் மற்றும் ரயில்வே கட்டண சலுகைகளை தாமாகவே முன் வந்து விட்டுக் கொடுப்பதைப் போல், இந்த சலுகையை விட்டு தர, இட ஒதுக்கீட்டினால், பயன் பெற்று முன்னேறிய மக்கள் முன்வர வேண்டும் என  அவர் கூறி வருகிறார்.

இதனால், இட ஒதுக்கீட்டின் பலன்கள் ஒதுக்கப்பட்ட சமூகத்தினருக்கு முழுமையாக சென்று, ஒதுக்கப்பட்ட சமூகத்தினர் மத்தியில் உள்ள சமூக அநீதி ஒழிக்கப்பட்டு, சம வாய்ப்புகள் உருவாகும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | JEE, NEET 2020 தேர்வு உள்ள நிலையில் Unlock 4 தொடர்பான முக்கிய தகவல்கள்...!!! 

இட ஒதுக்கீட்டில் பயன் பெற்று முன்னேறியவர்கள், அதே பிரிவில் உள்ள ஏழை மாணவர்களுக்கு வாய்ப்புகளை விட்டுத் தர வேண்டும் என்ற இவரது நோக்கத்தை நிறைவேற்ற மேலும் சிலர் இவருக்கு ஆதரவளித்துள்ளனர்.

இந்த காரணத்திற்காக பலர் ஒன்று சேர்ந்துள்ளனர். மத்திய பிரதேசம் பெத்துலைச் சேர்ந்த சுனில் லோகண்டே, பீகார் சீதாமாரியைச் சேர்ந்த மது பாஸ்வான், குஜராத்தைச் சேர்ந்த பாரத் மோச்சி, ராஜஸ்தானைச் சேர்ந்த மகேந்திர நாயக் பீல் மற்றும் பலர் இதில் அடங்குவர்.

மேலும் படிக்க | Sep 1 முதல் தமிழகத்தில் பொது நூலகங்கள் திறக்கப்படும்: அரசாங்க உத்தரவு!!

Trending News