CUET UG 2022: தாமதமாக வெளியான தேர்வு முடிவுகள் - ரிசல்ட்டை எங்கு பார்ப்பது?

மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு - இளநிலை (CUET UG), தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 16, 2022, 07:50 AM IST
  • CUET தேர்வுகள் முதல்முறையாக இந்தாண்டு நடத்தப்பட்டது.
  • இந்த தேர்வை நாடு முழுவதும் 14.9 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.
  • தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
CUET UG 2022: தாமதமாக வெளியான தேர்வு முடிவுகள் - ரிசல்ட்டை எங்கு பார்ப்பது? title=

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேருவதற்கு பொது நுழைத்தேர்வுகள் முதல் முறையாக இந்தாண்டு நடத்தப்பட்டது. இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. CUET எனப்படும் மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. 

இதில், நடப்பு கல்வியாண்டியின், இளநிலைப் பட்டப்படிப்புக்கான நுழைவுத்தேர்வு, ஆறு கட்டங்களாக ஜூலை 15ஆம் தேதி முதல் ஆக.30ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 259 நகரங்களிலும், வெளிநாடுகளின் 9 நகரங்களிலும் என மொத்தம் 489 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. 

இதையும் படிங்க | மாநில அரசுப் பணியில் இணைய விருப்பமா? மக்களுக்கு சேவை செய்ய 833 பேருக்கு வாய்ப்பு

இளநிலை தேர்வில் மொத்தம் 14.9 லட்சம் பேர் பங்கேற்றனர். இளநிலை தேர்வை தொடர்ந்து, செப்.1 ஆம் தேதி முதல் செப்.12ஆம் தேதிவரை முதுநிலைக்கான தேர்வுகளும் நடத்தப்பட்டன. இந்நிலையில், இளநிலை தேர்வு முடிவுகள் நேற்றிரவு (செப். 15) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், சில காரணங்களால் தேர்வு முடிவுகள் வெளிவர தாமதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, இன்று (செப். 16) அதிகாலையில் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 

CUET முடிவு 2022 - மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கும் வழிமுறை

  • CUET அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும் - cuet.samarth.ac.in 
  • அதன் முகப்புப் பக்கத்தில், கொடுக்கப்பட்டுள்ள CUET UG 2022 தேர்வு முடிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்
  • அடுத்து, NTA CUET விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிடவும்
  • CUET UG 2022 முடிவைக் கிளிக் செய்து, மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளவும்.

இளநிலை தேர்வு முடிவுடன், தேர்வின் இறுதி விடைக்குறிப்பு மற்றும் விண்ணப்பதாரர்களின் தனிப்பட்ட மதிப்பெண் அட்டைகளையும் தேசிய தேர்வு முகமை வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க | CBSE Exam 2023: 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான முக்கிய செய்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News