CBSE 10TH RESULT: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2022 வெளியானது

CBSE 10TH RESULT Declared: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின; 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலையில் வெளியாகிய நிலையில் மதியமே பத்தாம் வகுப்பு முடிவுகளும் வெளியிடப்பட்டன...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 22, 2022, 02:42 PM IST
  • சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின
  • மதியம் 2 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன
  • காலையில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின
CBSE 10TH RESULT: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2022 வெளியானது title=

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு முடிவுகள் 2022: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் cbseresults.nic.in இல் வெளியானது. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலையில் வெளியாகிய நிலையில் மதியம் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்லன... மாணவர்கள் தங்களின் 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள், மதிப்பெண்களை cbseresults.nic.in மற்றும் results.gov.in இல் பார்க்கலாம். சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கான இரண்டாம் நிலை தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 22, 2022) மதியம் 2 மணிக்கு அறிவிக்கப்பட்டது.

cbse.gov.in, results.cbse.nic.in, results.nic.in மற்றும் results.gov.in ஆகிய இந்த இணையதளங்களில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு முடிவுகளைப் பார்க்கலாம். 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் தேர்ச்சி சதவீதம் 94.4% என்ற் அளவில் உள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி முதல், மே மாதம் 24ம் தேதி வரை இரண்டாம் கட்ட பருவத் தேர்வுகளை நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் எழுதினார்கள்.

தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில், தேர்ச்சி விகிதம் 94.40 சதவிகிதமாக உள்ள நிலையில், 64,908 மாணாக்கர்கள் 95 சதவிகிதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 

மேலும் படிக்க | CBSE 12 Result 2022: எந்தெந்த செயலிகளில் சிபிஎஸ்இ ரிசல்ட் பெறலாம்

இந்த ஆண்டு, ஏப்ரல் 26 முதல் ஜூன் 15 வரை நடைபெற்ற CBSE 10வது, 12வது பருவம் 2 தேர்வுகள் 2022 இல் கிட்டத்தட்ட 35 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள்.. CBSE 10ஆம் வகுப்பு தேர்வில் மொத்தம் 21 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். 

மேலும் படிக்க | CBSE class 12th Result: சிபிஎஸி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பருவம் 2 முடிவுகள் 2022: எஸ்எம்எஸ் மூலம் மதிப்பெண்களைச் சரிபார்ப்பதற்கான சுலபமான வழிமுறைகள்

படி 1: உங்கள் மொபைலில் 'மெசேஜ்' ஆப்ஸைத் திறக்கவும்.

படி 2: செய்தியை உள்ளிடவும் - cbse10/cbse12 < space > roll number.

படி 3: செய்தியை 7738299899 என்ற மொபைல் எண்ணுக்கு அனுப்பவும்.

படி 4: உங்களின் சிபிஎஸ்இ வகுப்பு 10 ஆம் ஆண்டின் இரண்டாம் நிலை முடிவுகள் 2022 உங்களுக்கு SMS மூலம் அனுப்பப்படும்.

மாணவர்கள் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை கீழ்கண்ட வலைதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்:

cbse.gov.in, cbseresults.nic.in, results.nic.in, results.gov.in, IVRS அமைப்பு, எஸ்எம்எஸ் சேவை, டிஜிலாக்கர் ஆப் -- digilocker.gov.in, பரிக்ஷா சங்கம் -- parikshasangam.cbse.gov.in

மேலும் படிக்க | சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் தொடர்பான புதிய அப்டேட்
 
CBSE 10வது முடிவுகள் 2022: மதிப்பெண் அட்டையைப் பதிவிறக்குவதற்கான படிகள்

- அதிகாரப்பூர்வ வலைத்தளங்களைப் பார்வையிடவும்- cbse.gov.in, cbresults.nic.in
- முகப்புப்பக்கத்தில், சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முடிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்
- தேவையான விவரங்களை உள்ளிடவும் -- பதிவு எண்/ ரோல் எண்
- 10 ஆம் வகுப்பு முடிவு 2022 திரையில் தோன்றும்
- 10வது ஸ்கோர் கார்டைப் பதிவிறக்கி, மேலும் குறிப்புக்கு பிரிண்ட் அவுட் எடுக்கவும்

மேலும் படிக்க | CBSE Class 12 Result 2022: டாப் 3 இடங்களில் தென் இந்திய மண்டலங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News