IPL _2018: ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி அணி பேட்டிங்!

இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன!

Last Updated : May 5, 2018, 08:27 PM IST
IPL _2018: ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி அணி பேட்டிங்! title=

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இதில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. இந்த போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் நடைபெறுகிறது.

முதலில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் களமிறங்கவுள்ளது.

இந்தப் போட்டியில், ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 150 ரன்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி அணியினை பெறுத்தவரை தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று காம்பீர் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர், தான் வழிநடத்திய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டியில் டெல்லி அணியை வெற்றி பெற வைத்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

பந்துவீச்சில் ஹைதரபாத் அணியின் பலத்தை சொல்லவே தேவையில்லை. புவனேஷ்வர் குமார், ரசீத் கான், சித்தார்த் கவுல் போன்ற இளம் வீரர்கள் எதிரணிகளுக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

பந்துவீச்சிற்கு சாதகமான இன்றைய மைதானம் இரு அணிகளுக்கும் கடும் சவாலாக இருக்கும். அதே வேளையில் இரு அணிகளின் பலம், பலவீனம் ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியே வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

Trending News