Tirumala Tirupati: திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம் உலகப் புகழ் பெற்றது. உலகிலேயே மிகவும் பணக்காரக் கடவுளாக திருப்பதி பெருமாள் கருதப்படுகிறார். இக்கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருவர். இத்தகைய பிரசித்தப்பெற்ற இக்கோவிலில் சமீப காலமாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்து இருந்தது.
இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) இணையதளத்தில் 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு இன்று முதல் ஆரம்பமானது.
ALSO READ | காவாளம்: திருப்பதி உண்டியல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்
அதன்படி அக்டோபர் மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் நாள் ஒன்றுக்கு 5000 தரிசனம் டிக்கெட் வெளியிடப்படுவது வழக்கம். அதில் ரூ. 300 கட்டண சிறப்பு தரிசனம் முன்பதிவு இணையதளத்தில் செய்வதற்கான வசதியை இன்று காலை 9 மணி முதல் திருப்பதி இணையதளத்தில் செய்ய முடியும்.
கட்டணம் மற்றும் இலவச டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை
ரூ. 300 கட்டண தரிசனம் முன்பதிவு செய்ய https://tirupatibalaji.ap.gov.in/index.html#/login என்ற இணையதளத்தில் சென்று கேட்கப்படும் விபரங்களைப் பதிவு செய்யவும்.
பின்பற்ற வேண்டிய மிக்க்ய விதிமுறைகள்
* நுழைவு நேரத்தில், யாத்ரீக புக்கிங் போது பயன்படுத்தப்படும் அதே அசல் புகைப்பட ஐடி ஐ காண்பிக்கவும்.
* யாத்ரீகர்கள் பாரம்பரிய உடை அணிய வேண்டும்.
* யாத்ரீகர்கள் சுவாமி தரிசனம் செய்ய வரும் போது டிக்கெட் பிரிண்ட் செய்து கொண்டு வரவும்.
* எந்த சாமான்களும் / கைப்பேசிகளும் / மின்னணு கேஜெட்டுகள் எடுத்துச் செல்ல கூடாது.
* பிற தகவலுக்கு 24/7 உதவி மேசை எண் 1 800 425 333333 மற்றும் 1 800 425 4141 தொடர்பு கொள்ளலாம்.
முக்கிய குறிப்பு: திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் இனி 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது மூன்று நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை உடன் கொண்டு வரவேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
LSO READ | TTD: திருப்பதிக்கு காணிக்கையாக கிடைத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நிலை என்ன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR