வாழ்வின் அனைத்து இன்னல்களையும் போக்கும் சோமவார விரதம்..!!!

திங்கட்கிழமையில் பிரதோஷமும் வருமானால், அது மிகவும் விசேஷமான சோமவார விரதமாக அமையும். பிரதோஷ காலம் சிவனுக்கு மிகவும் உகந்தது.    

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 8, 2021, 12:01 AM IST
  • திங்கட்கிழமையில் பிரதோஷமும் வருமானால், அது மிகவும் விசேஷமான சோமவார விரதமாக அமையும். பிரதோஷ காலம் சிவனுக்கு மிகவும் உகந்தது.
  • சோமவார விரதத்தை கடைப்பிடித்து வந்தால், பிரிந்தவர்கள் எங்கிருந்தாலும் உங்களை தேடி வருவார்கள்.
  • வாழ்வில் சகல கஷ்டங்களும் நீங்க சோமவார விரதமிருந்தால் போதும்.
வாழ்வின் அனைத்து இன்னல்களையும் போக்கும் சோமவார விரதம்..!!! title=

சோமன் என்ற சொல்லுக்கு பார்வதியோடு இணைந்த சிவபெருமான் என்ற பொருள் உண்டு. திங்கட்கிழமையை சோம வாரம் எனக் கூறுவார்கள். திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாள். திங்கட்கிழமை கடைபிடிக்கும் விரதம் சோமவார விரதம் என கூறப்படுகிறது.

வாழ்வில் சகல கஷ்டங்களும் நீங்க சோமவார விரதமிருந்தால் போதும். சிவனை மகிழ்விக்க சிவ ஸ்தோத்திரங்கள் சொல்லலாம். சிலர் நாள் முழுவதும் எந்த உணவு ஏதும் எடுத்துக்கொள்ளாமல் விரதம் இருப்பார்கள். ஆனால், முடியாதவர்கள் அப்படி வருத்திக் கொள்ள வேண்டும் என்பதல்ல. அவரவர் உடல் நலத்துக்கு ஏற்றார்போல எளிமையான சைவ உணவை ஒருவேளைக்கு மட்டும் எடுத்துக்கொள்ளலாம். 

விரத நாள் அன்று சிவாஷ்டகம், சிவ அஷ்டோத்திரம் போன்ற உங்கள் தெரிந்தவற்றை சொல்லி மனதார சிவனை தியானித்து விரதமிருந்தால், உங்கஃள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். 

உங்களுக்கு எந்த ஸ்தோத்திரமும் தெரியவில்லை என்றாலும் கவலை இல்லை. ‘ஓம் நமசிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை மட்டும் சொன்னால் போது. உங்களால் முடிந்தால், காலையில் அல்லது மாலையில் சிவன் கோயிலுக்குச் சென்று வரலாம்.
திங்கட்கிழமையில் பிரதோஷமும் வருமானால், அது மிகவும் விசேஷமான சோமவார விரதமாக அமையும். பிரதோஷ காலம் சிவனுக்கு மிகவும் உகந்தது.  

பிரிந்த குடும்பம் ஒன்று சேர வேண்டும் என விரும்புபவர்கள், திங்கட்கிழமையன்று பயபக்தியுடன் சிவபெருமானை நினைத்து இந்த சோமவார விரதத்தை  கடைப்பிடித்து வந்தால், பிரிந்தவர்கள் எங்கிருந்தாலும் உங்களை தேடி வருவார்கள். இந்த விரதம் அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்தது.

இதனால் கணவனை பிரிந்த மனைவி, மனைவியை பிரிந்த கணவன் மனம் மாறி ஒன்று சேருவார்கள். அதோடு, மாங்கல்ய தோஷம், களத்திரதோஷம், ஆகியவை நீங்கி, வாழ்க்கையின் இருள் நீங்கி ஒளி வீசும்.

 

ALSO READ | மகாலட்சுமியின் மனம் குளிர்ந்து செல்வம் கொழிக்க 10 எளிய வழிகளை பின்பற்றலாம்...!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News