Ram Mandir Trust: லாக்கரில் இடமில்லை, எனவே தானம் கொடுக்கவேண்டாம்!!!

வங்கி லாக்கர்கள் நிரம்பி வழிவதால் இனி தானம் செய்ய வேண்டாம் என்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பொறுப்பேற்றிருக்கும் ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை     கேட்டுக்கொண்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 18, 2021, 10:23 PM IST
  • லாக்கர்கள் நிரம்பி வழிகின்றதால் இனி தானம் செய்ய வேண்டாம்
  • 400 கிலோ வெள்ளி செங்கற்கள் சேர்ந்துவிட்டன
  • லாக்கரின் பாதுகாக்க முடியவில்லை
Ram Mandir Trust: லாக்கரில் இடமில்லை, எனவே தானம் கொடுக்கவேண்டாம்!!!   title=

புதுடெல்லி: வங்கி லாக்கர்கள் நிரம்பி வழிகின்றதால் இனி தானம் செய்ய வேண்டாம் என்று புனித நகரமான அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பொறுப்பேற்றிருக்கும் ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை (Ram Janmbhoomi Teerth Kshetra Trust வியாழக்கிழமை (பிப்ரவரி 18) நன்கொடையாளர்களைக் கேட்டுக்கொண்டது.

நாடு முழுவதும் நன்கொடையாளர்களிடமிருந்து நான்கு குவிண்டால் (400 கிலோ) அளவுக்கு வெள்ளி செங்கற்களை (silver bricks) நன்கொடை கிடைத்திருப்பதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இவற்றை சேமித்து வைப்பது மிகவும் கடினமான பணியாகும்.

“ராமர் ஆலயம் கட்டுவதில் தங்களுக்கும் பங்கு இருக்க வேண்டும் என்பதற்காக, நாடு முழுவதிலுமிருந்து மக்கள் கோயில் கட்டுமானத்திற்காக பயன்படுத்த வெள்ளி செங்கற்களை அனுப்புகின்றனர். எங்களிடம் இப்போது ஏராளமான வெள்ளி செங்கற்கள் சேர்ந்துவிட்டன. அறக்கட்டளையின் வங்கி லாக்கர்கள் நிரம்பி வழிகின்றன. இவற்றை எப்படி பாதுகாப்பது என்று கவலையாக இருக்கிறது” என்று ஸ்ரீ ராம் ஜம்பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறினார்.

Also Read | IPL 2021 auction: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப் பட்டியல்

நன்கொடை கொடுக்க விரும்புபவர்கள் பணத்தை நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக்கொண்டார். கட்டுமானம் மிகவும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், வெள்ளி போன்ற உலோகங்களுக்கு இப்போது தேவையில்லை என்றும் அவர் கூறுகிறார்.

வசந்த பஞ்சமி புனித நாளன்று, அறக்கட்டளைக்கான அடித்தளத்தை கட்டியெழுப்ப அறக்கட்டளை தொடங்கியிருக்கிறது.

இதற்கிடையில், கோயில் கட்டுமானத்திற்கான நன்கொடைகள் 1500 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை 1,511 கோடி ரூபாய் ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த்த க்ஷேத்ராவின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி தெரிவித்தார்.

"அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் ஆலயத்தை நிர்மாணிப்பதற்காக, முழு தேசமும் நிதி நன்கொடை அளிக்கிறது. எங்கள் நன்கொடை சேகரிப்பு பயணத்தின் போது நாடு முழுவதும் 4 லட்சம் கிராமங்களையும் 11 கோடி குடும்பங்களையும் சென்று சந்திக்க இலக்கு வைத்துள்ளோம். ஜனவரி 15 முதல் நன்கொடை இயக்கத்தை தொடங்கிவிட்டோம், அது பிப்ரவரி 27 வரை தொடரும் ”என்று கிரி கூறினார்.

Also Read | Drishyam 2 மலையாள திரைப்படம் ரிலீஸ் இன்னும் சில மணி நேரத்தில்…

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News