சிவபெருமானை வணங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது.
சிவராத்திரி விரதமானது வயது, பால், இன, மத வேறுபாடுகளைக் கடந்த யாவரும் அனுஷ்டிக்க கூடியது. சிவராத்திரி அன்று அதிகாலை நீராடி, அன்று முழுவதும் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது.
இரவில் நான்கு காலங்களிலும் நடக்கிற பூஜைகளில் கலந்து எம்பெருமானை வணங்க வேண்டும். மேலும் உத்திராட்சை மாலையுடன் சிவ பூஜையை ஆரம்பிக்க வேண்டும். வில்வ இலைகளைப் பயன்படுத்தி பூஜிப்பது பெரும் சிவபுண்ணியத்தைத் தரும்.
கோவில்களில் வீதி வலம் வரும் போது சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். சிவராத்திரி விரதமானது வயது, பால், இன, மத வேறுபாடுகளைக் கடந்த யாவரும் அனுஷ்டிக்க கூடியது.
சிவலிங்கத்தை பால் கொண்டு மகா அபிஷேகம் செய்ய வேண்டும். காசி விஸ்வநாதர், சோம்நாதர் போன்ற கோயில்கள் இன்று பல்வேறு மூலைகளிலிருந்தும் பக்தர்களின் வருகையை காண்கின்றன. ஒரே இரவில் விழிப்புணர்வு மற்றும் சடங்கு நோன்பு ஆகியவை மகாசிவராத்திரி கொண்டாட்டங்களின் பொதுவான அம்சங்களாகும்.