தனுசு ராசி நண்பர்களே... புகழ், கௌரவம் கூடும் நாள் இன்று...

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? பார்க்கலாம்...

Last Updated : Nov 25, 2019, 07:47 AM IST
தனுசு ராசி நண்பர்களே... புகழ், கௌரவம் கூடும் நாள் இன்று... title=

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? பார்க்கலாம்...

மேஷம்: குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில்  மேலதிகாரி உங்களுக்கு ஆதரவாக இருப்பார். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்: கனிவாகப் பேசி காரியங்களைச் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமையை மற்றவரிடம் சொல்லி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாகப் பார்க்க நினைத்த ஒருவரைச் சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள் அமோகமான நாள்.

மிதுனம்: மற்றவர்களை நம்பி எந்த  வேலைகளையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவு எடுப்பீர்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். பழைய கடன் பிரச்சினையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலியவந்து உதவுவார்கள் . நினைத்தது நிறைவேறும் நாள்.

கடகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும் வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும் நட்பு வட்டம் விரிவடையும் . வியாபாரத்தில் அதிரடி சலுகைகள்  மூலம் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

சிம்மம்: உங்கள் முயற்சியில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் சொந்த பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள்  தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும் வெற்றி பெறும் நாள்.

கன்னி: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழையபிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர் கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். நிம்மதி கிட்டும் நாள்.

துலாம்:  ராசிக்குள் சந்திரன் இருப்பதால், ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பலமுறை அலைந்து முடிப்பீர்கள். உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக்கொள்வீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

விருச்சிகம்: கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்து இட வேண்டாம். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும் . வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில், பொறுப்புகள் அதிகரிக்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

தனுசு: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில், அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்து வம் தருவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

மகரம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலையைப் பகிர்ந்து கொள்வார்கள். வேற்று மதத்தவர்  அறிமுகமாவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். இனிமையான நாள்.

கும்பம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பிரபலங்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். சாதிக்கும் நாள்.

மீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவு எடுக்கப்பாருங்கள். முன்கோபத்தைக் குறையுங்கள். உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்து கொள்வது  நல்லது. உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்

Trending News