அட்சய திருதியை தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். இந்து புராணப்படி பரசுராமரின் பிறந்த நாளாகவும் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. "அட்சயா" எனும் சொல் சமசுகிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்றதால் தங்கம், வெள்ளி, கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.
இந்நிலையில் இன்று அட்சய திருதியையில் தங்கம் தவிர வேறு என்னென்ன வாங்கலாம்?
* அட்சய திருதியையில் வெள்ளை நிறப் பொருட்கள் அல்லது மஞ்சள் நிறப் பொருட்கள் வாங்குவது நலம் என்று சாஸ்திரம் கூறுகிறது. அட்சய திருதியை அன்று பச்சரிசி வாங்குவது நல்லது.
* இன்றைய தினத்தில் புது வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூஜை செய்வது போன்ற புதிய முயற்சிகளை செய்தால் தொழில் விருத்தியாகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
* மஞ்சள் துணியில், சிறிது அரிசி எடுத்துக் கட்டி நாம் அன்றாடம் பயன்படுத்தும் அரிசி டப்பாவிலும் போட்டு வைப்பது நல்லது.
* மஞ்சள் பொடி அல்லது மஞ்சள் கிழங்கு வாங்கலாம். அதிலும் கஸ்தூரி மஞ்சள் வாங்கினால் இன்னும் சிறப்பு. கஸ்தூரி மஞ்சள் தனி சக்தி உண்டு அதனால் அதை வீட்டில் வாங்கி வைக்கலாம்.
* இன்றைய தினத்தில் அன்னதானம், வஸ்திர தானம் செய்தால் நல்லது.
* அட்சய திருதியையில் தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டும் என்பதில்லை, வெள்ளியும் வாங்கலாம்.
* அட்சய திருதியை நாளான இன்று செய்யும் அனைத்து காரியங்களும் வளர்பிறை போல வளரும் என்றும், இன்றைய நாளில் தங்கம் மட்டும் அல்ல எந்த பொருளை சேமித்தாலும் அது நன்மையே.