புதுடில்லி: இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமான Zee குழுமம், இந்திய தலைவர்களுடன் கலந்துறையாடும் வகையில் மாபெரும் கூட்டத்தை இன்று ஏற்பாடு செய்தது.
இந்த கூட்டத்தில், தலைவர்கள் பலரும் கலந்துக்கொண்டு தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர். இந்த சிறப்பு நிகழ்விற்கான நோக்கமானது, இந்தியா எப்படி முன்னேற்றப் பாதைக்கு கொண்டுச் செல்வது, மாற்றங்களின் எதார்த்தம் என்ன? எதிர்க்கட்சித் தலைவர்கள் தற்போதைய அரசாங்கங்க செயல்பாடுகள் என்ன? அவர்களின் செயல்திறன்களை மீது தங்களின் கருத்துக்கள் என்ன என்பதினை குறித்துப் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித் ஷா சிறப்பு விருந்தாளராக கலந்துக்கொண்டு பேசினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது...
வருகின்ற 2019 ஆண்டு தேர்தலானது பாஜக-வின் கடைசி அத்தியாயமாக இருக்காது. எதிர் நோக்கி வரவுள்ள கர்நாடக தேர்தலானது, பாஜக-வின் 21 மாநிலமாக கார்நாடகாவை மாற்றும் என தெரிவித்தார்.
உத்திர பிரதேஷ மாநிலத்தில் யோகி வெற்றிப் பெறுகையில், அம்மாநில மக்களுக்கு மோடி அவர்களின் நலப்பணி திட்டங்கள் சென்றடைய வழிவகுத்தது. எனவே அம்மாநில மக்கள் மோடியின் ஆட்சியை எதிர் நோக்கி தான் இருக்கின்றனர். தற்போது உபி இடைத்தேர்தலில் பாஜக பெற்ற தோல்விகள் வரும் தேர்தல்களை பாதிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரும் 2019 தேர்தலில் எதிர் கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர உள்ளதாக இருப்பது குறித்து கேட்கையில் பதிலளித்த அவர் "அன்று இந்திரா காந்தி vs அனைத்து கட்சிகள், இன்று மோடி vs அனைத்து கட்சிகள்" என பதில் அளித்துள்ளார்.
நாங்கள் வெற்றியின் மயக்கத்தில் ஆடவில்லை, எங்கள் பணிகளை செம்மையாக செய்துக்கொண்டு தான் இருக்கின்றோம். வரும் 2019 தேர்தலுக்கான களப்பணிகளை மேற்கொண்டு வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கால திட்டங்கள் குறித்து வினவுகையில் "ஒடிசா, மேற்கு வங்காளத்தினை தவிர வடகிழக்கு மாநிலங்களை நாங்கள் வென்று விட்டோம், தற்போது தெற்கில் நுழைய சந்திரபாபு நாயுடும் வழிவகுத்து கொடுத்து விட்டார்" என தெரிவித்துள்ளார்!