நீட் நுழைவுத் தேர்வுக்கான ஆடை கட்டுப்பாடு CBSE வெளியீடு!!

மருத்துவ படிப்புக்கான இந்த வருட நீட் தேர்வின் ஆடை கட்டுப்பாடுகளை வெளியிட்டது சி.பி.எஸ்.இ....!

Last Updated : Apr 19, 2018, 02:41 PM IST
நீட் நுழைவுத் தேர்வுக்கான ஆடை கட்டுப்பாடு CBSE வெளியீடு!! title=

மருத்துவ படிப்பில் சேர்வதற்காக தேசிய அளவில் நீட் என்ற பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதன் முதலாக கடந்த ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் நீட் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டது. 

இந்த தேர்வை வருகிற மே மாதம் 6-ம் தேதி மத்திய கல்வி வாரியம் CBSE  நாடு முழுவதும் நடத்துகிறது.

முன்னதாக, நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 

இந்நிலையில், தற்போது நீட் தேர்விற்கான ஆடை கட்டுப்பாடுகளை சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ளது. 

இதன்படி, மாணவர்கள் வெளிர் நிறத்திலான ஆடைகளை அணிய வேண்டும். அரைக் கை சட்டைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். 

ஷூ அணியக் கூடாது. பெரிய பட்டன்கள் வைத்த ஆடைகளை அணியக் கூடாது, பூக்கள், பேட்ஜ்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தக் கூடாது. 

குறைந்த உயரம் கொண்ட சாதாரண செருப்பு, சாண்டல்ஸ் அணியலாம். 

தொலைத்தொடர்பு சாதனங்கள் ஜியோமெட்ரி பாக்ஸ் அல்லது பென்சில் பாக்ஸ், கைப்பைகள், பெல்ட், தொப்பி, நகைகள், வாட்ச் மற்றும் உலோகப் பொருள்கள் ஆகியவற்றையும் எடுத்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நீட் தேர்வின் போது அறிவுறுத்தப்பட்ட ஆடைக் கட்டுப்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த ஆண்டு முன்கூட்டியே ஆடை கட்டுப்பாட்டு விதிகளை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Trending News