நேற்று (வியாழக்கிழமை) இரவு அதிமுக எம்.எல்.ஏ கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்கேற்றார் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர். கூட்டம் முடிந்து வெளியவந்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரிடம், பெண் செய்தியாளர் ஒருவர் மைக்கை நீட்டி, கூட்டத்தில் என்ன பேசப்பட்டது, என்ன தீர்மானங்கள் போடப்பட்டது என்று கோட்டுகொண்டு அவரை பின்தொடர்ந்து சென்றார். ஆனால் பெண் செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்காத அமைச்சர், உங்கள் கண்ணாடி அழகாக இருக்கிறது என்று கூறுகிறார்.
அதற்கு பெண் செய்தியாளர் "இந்த கண்ணாடியை நான் எப்பவும் போட்டுதான் இருக்கிறேன் என்று கூறிக்கொண்டே, மீண்டும் அமைச்சரிடம், சார் இன்னைக்கு கூட்டத்தில் என்ன பேசப்பட்டது எனக் கேட்கிறார். ஆனால் அமைச்சர் மீண்டும் மீண்டும் இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க.. இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க.. இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க கூறிக்கொண்டே செல்கிறார்.
ஆனால் அமைச்சரின் கிண்டலை போருத்படுத்தாமல், சார் கூட்டத்தில் என்ன நடந்தது எனக் கேட்கிறார். அதற்க்கு அமைச்சர் அறிக்கை வெளியிடப்படும், அப்பொழுது தெரிந்துவிடும் என்ன ஆலோசனை செய்யப்பட்டது என்று கூறினார்.
மீண்டும் செய்தியாளர்கள் "அவரிடம் ஆலோசனை கூட்டத்தை பற்றி கேட்கிறார்கள். அதற்கு மூத்த அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் பேசுவார்கள் எனக் கூறியதோடு, மீண்டும் பெண் செய்தியாளரை பார்த்து "அழகா இருக்கீங்க.. அழகா இருக்கீங்க.. அழகா இருக்கீங்க.. என்று மூன்று முறை கூறுகிறார்.
தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், பெண் செய்தியாளரை பார்த்து இவ்வாறு கூறுவதை, அமைச்சருடன் இருந்த மற்ற அதிகாரிகள் சிரிக்கிறார்கள். இச்சம்பவம், முழுவதும் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு மாநிலத்துக்கு அமைச்சராக இருந்துக்கொண்டு, அனைவருக்கும் ஒரு உதாரணமாக இருக்க வேண்டிய அமைச்சர், பொதுவெளியில் பெண் நிருபரை பார்த்து, "நீங்க ரொம்ப அழகாக இருக்கிங்க" என மீண்டும் மீண்டும் கூறுவது சர்ச்சைக்குரியது ஆகும்.