ZEEL-Sony Merger: இந்திய மீடியா துறையில் மிகப் பெரிய நாள் இன்று. மீடியா துறையின் மிகப்பெரிய ஜாம்பவான்களான இரு குழுமங்கள் இன்று ஒன்று சேர்ந்துள்ளன.
ZEE என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸின் (ZEEL) போர்ட் ஆஃப் டைரக்டர்கள், ZEEL மற்றும் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா (SPNI) இடையிலான இணைப்புக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளனர். மீடியா உலகின் மிகப்பெரிய இணைப்பாக கருதப்படும் ஜீ-சோனி மர்ஜர் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகள் பற்றி இங்கே காணலாம்.
இணைப்புக்குப் பிறகு MD CEO பதவிகள் யாருக்கு?
ZEE என்டர்டெயின்மென்ட் சோனி பிக்சர்ஸ் இந்தியாவுடன் இணைவதற்கான முதன்மை ஒப்புதலுக்குப் பிறகும், எசல் குழுமத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் புனீத் கோயங்காவே இணைக்கப்பட்ட புதிய அமைப்பின் நிர்வாக இயக்குநர் (MD) மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) தொடருவார் என கூறப்பட்டுள்ளது.
இணைப்புக்குப் பிறகு புனீத் கொயங்கா 157.5 டாலர் முதலீடு செய்யவுள்ளர்
இணைப்புக்குப் பிறகு, இணைக்கப்பட்ட நிறுவனத்தில், சோனி என்டர்டெயின்மென்ட்டிற்கு பெரும்பான்மையான பங்கு இருக்கும். இரு தரப்பினரும் பிணைப்பு இல்லாத விதிமுறை ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இரு தரப்பினரும், 90 நாள் கால அவகாசத்துக்குள், இந்த ஒப்பந்தத்துக்கு தேவையான தணிக்கைகள், மறு ஆய்வுகள் ஆகியவற்றை நிறைவு செய்வார்கள். இணைப்புக்குப் பிறகு, இணைக்கப்பட்ட புதிய நிறுவனம் இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்.
இரு தரப்பினரும் போட்டியற்ற ஒப்பந்தத்தில் (non-compete agreement) கையெழுத்திடுவார்கள். ZEEL இன் முதலீட்டாளர்கள் நிறுவனத்தில் 47.07 சதவீத பங்கை கொண்டிருப்பார்கள் என கூறப்படுகின்றது.
ZEEL-Sony ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் என்ன?
Sony உடனான இந்த இணைப்பின் மூலம், இரு தரப்பினருக்கும், இருவருடைய காண்டெண்ட் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கான வளர்ச்சி மூலதன அணுகல் (growth capital access) கிடைக்கும். மறுபுறம், சோனிக்கு இந்தியாவில் தனது இருப்பை அதிகரிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
ZEEL-ன் வணிகம்
ZEEL 10 மொழிகளில், 100 க்கும் மேற்பட்ட சேனல்களுடன் 190 நாடுகளை சென்றடைகிறது. பார்வையாளர்களிடையே 19 சதவீத சந்தைப் பங்கு ZEEL-க்கு உள்ளது. டிவி காண்டெண்ட் மட்டும் 2.6 லட்சம் மணிநேரங்களுக்கு மேல் உள்ளது. இது தவிர, டிஜிட்டல் தளத்தில் Zee5 மூலம் நிறுவனத்திற்கு ஒரு மிகப்பெரிய பிடிப்பு உள்ளது. மேலும், நாட்டில் 25 சதவீத படங்கள் ZEE Network-ல் பார்க்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
சோனிக்கு இந்தியாவில் 31 சேனல்கள் உள்ளன. இவை 167 நாடுகளில் பார்க்கப்படுகின்றன. சோனி நாட்டில் 700 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டுள்ளது. பார்வையாளர்களில் 9 சதவீத சந்தைப் பங்கு இதற்கு உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: நிறுவனங்களின் பெயர்கள் ஒரேபோல் இருந்தாலும், Zeel எங்கள் துணை நிறுவனம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. எங்களது மேலாண்மை பொறுப்பு ஜீ மீடியா கார்ப்பரேஷனிடம் உள்ளது.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR