மார்ச் 1 முதல் ரூ.2000 நோட்டுகள் ATM-ல் கிடைக்குமா?

மார்ச் 1ஆம் தேதி முதல் ரூ.2000 நோட்டுகள் பண பரிவர்த்தனை (Cash Transaction) கிடையாது என தகவல்கள் பரவி வருகிறது. 

Last Updated : Feb 26, 2020, 01:37 PM IST
மார்ச் 1 முதல் ரூ.2000 நோட்டுகள் ATM-ல் கிடைக்குமா? title=

மார்ச் 1ஆம் தேதி முதல் ரூ.2000 நோட்டுகள் பண பரிவர்த்தனை (Cash Transaction) கிடையாது என தகவல்கள் பரவி வருகிறது. 

ஏடிஎம்மில் இருந்து பணத்தை திரும்பப் பெறுவதில் அடிக்கடி வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரு செய்தி இங்கே காத்துக்கொண்டிருக்கிறது. அடுத்த முறை நீங்கள் அருகிலுள்ள ஏடிஎம் சென்று ரூ .2,000 நோட்டுகளை எடுக்க விரும்பினால் உங்களுக்கு ஏமாற்றமாக ஏற்படலாம். ஆம், சென்னையைச் சேர்ந்த இந்தியன் வங்கி ரூ .200 நோட்டுகளை அதிகம் ஏற்றவும், ரூ .2,000 நோட்டுகளை ஏற்றுவதை நிறுத்தவும் முடிவு செய்துள்ளதால் இது உங்களுக்கு ஏமாற்றமாக இருக்கலாம். வாடிக்கையாளர்களின் மேம்பாட்டிற்காக வங்கியில் இருந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பணமதிப்பிழப்பு காரணமாக பட்ட அவஸ்தை  பொதுமக்கள்  மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தி உள்ள நிலையில், மீண்டும் அதுபோல அறிவிக்கப்படுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டின் இறுதியில் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை செல்லாது என மோடி அரசு அறிவித்து நாடு முழுவதும் மக்களை கெடுமையான துயரத்துக்கு உள்ளாக்கியது. இதைத் தொடர்ந்து புதிய ரூ.500 ரூ.2000 நோட்டுகளை வெளியிடப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான தகவலில், ரிசர்வ் வங்கியின் 2018-19 ஆம் நிதியாண்டின் ஆண்டறிக்கையின் சில அம்சங்கள் அண்மையில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளி யானது.  இதன்படிபுதிய ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்ட நிலையில், எதற்காக  நிறுத்தப்பட்டது என்று ரிசர்வ் வங்கி எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.

இந்த நிலையில், தற்போது  ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில் ரூ.2000 நோட்டுகளை ஏ.டி.எம். மையங்களில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் இந்தியன் வங்கி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  ஏ.டி.எம். இயந்திரங்களில் இனிமேல்ரூ. 2000 நோட்டுகள்  பணபரிவர்த்தனை செய்யப்படமாட்டாது என்று கூறப்படுகிறது. இந்த நடைமுறைகள் அனைத்தும் வருகிற மார்ச் 1-ஆ ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

Trending News