SBI's Amrit Kalash FD Scheme: 2023 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது, மேலும் 2024 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் கொண்டாட்டங்களும் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளன. இந்த டிசம்பர் மாதத்துடன், பல முக்கிய பணிகளின் காலக்கெடுவும் முடிவடைகிறது. இந்த முக்கியமான பணிகளில் முதலீடு தொடர்பான திட்டங்களும் அடங்கும், அவற்றில் ஒன்று எஸ்பிஐ அம்ரித கலசம் எஃப்டி திட்டமாகும், இதில் 400 நாட்கள் முதலீட்டில் அதிக அளவு வட்டி வழங்கப்படுகிறது. இதில் முதலீடு செய்வதன் மூலம் பெரும் பயனடையலாம். இதில் முதலீடு செய்வதற்கான காலக்கெடு 31 டிசம்பர் 2023 அன்று முடிவடைகிறது.
காலக்கெடு அதிகரிக்கப்படும் வாய்ப்புகள் மிக குறைவு
முன்னதாக எஸ்பிஐ அம்ரித கலசம் திட்டத்தின் காலக்கெடு ஆகஸ்ட் 15, 2023 அன்று முடிவடைந்த நிலையில், இந்த திட்டத்திற்கு இருக்கும் வரவேற்பை கருத்தில் கொண்டு, எஸ்பிஐ வங்கி, இதன் காலக்கெடுவை டிசம்பர் 31 வரை நீட்டித்தது. தற்போது, இந்த திட்டத்தின் கடைசி தேதியை நீட்டிப்பது குறித்து எஸ்பிஐ எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதாவது இந்த FD திட்டத்தில் முதலீடு செய்ய இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளது. இது எஸ்பிஐயின் சிறப்பு FD திட்டமாகும். இதில் 400 நாட்களுக்கு முதலீடு செய்ய வேண்டும். ஸ்டேட் வங்கி இந்த ஆண்டு ஏப்ரல் 12, 2023 அன்று இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது மற்றும் அதன் காலக்கெடு ஜூன் 23, 2023 என நிர்ணயிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடைசி தேதி முடிவதற்கு முன்பே, அம்ரித கலசம் திட்டத்தில் முதலீடு செய்ய வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 15, 2023 வரை வங்கி அவகாசம் அளிப்பதாக அறிவித்தது. இதற்குப் பிறகு, அது மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டு, 2023 டிசம்பர் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டது.
மூத்த குடிமக்களுக்கு 7.6% வட்டி
எஸ்பிஐயின் இந்த சிறப்பு FD திட்டத்தில், பொது வாடிக்கையாளர்களுக்கு 7.1 சதவீத வட்டி கிடைக்கும் நிலையில், வங்கி மூத்த குடிமக்களுக்கு (Senior Citizen) 7.6 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில், முதிர்வு வட்டி மற்றும் டிடிஎஸ் கழிக்கப்பட்டு வாடிக்கையாளரின் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. வருமான வரிச் சட்டத்தின் கீழ் பொருந்தும் விகிதத்தில் TDS விதிக்கப்படும். அம்ரித் கலாஷ் எஃப்டியில் முதலீட்டாளர்கள் ரூ.2 கோடி வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் பணத்தை முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கானஅம்சமும் உள்ளது. அதாவது முதிர்வு தேதிக்கு முன் பணத்தை எடுக்கலாம். அம்ரித கலசம் எஃப்டியில் முதலீடு செய்ய தனி தயாரிப்பு குறியீடு தேவையில்லை. இதில் முதலீடு செய்ய யோனோ பேங்கிங் செயலியை பயன்படுத்தலாம்.
வருமான வரி விதிகளின்படி வரி விலக்கு
அம்ரித் கலாஷ் FD திட்டத்தின் கீழ், கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் வட்டியை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில் பெறலாம். டிடிஎஸ்ஸில் இருந்து கழிக்கப்படும் வட்டி வாடிக்கையாளரின் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. வருமான வரி (IT) விதிகளின்படி வரி விலக்கு பெற, படிவம் 15G/15H ஐப் பயன்படுத்தலாம். திட்டத்தின் கீழ், 19 வயது அல்லது அதற்கு மேற்பட்ட குடிமக்கள் தங்கள் கணக்கைத் திறக்கலாம்.
கணக்கை திடங்க தேவையான ஆவணங்கள்
கணக்கைத் தொடங்க, உங்களுக்கு ஆதார் அட்டை, அடையாளச் சான்று, வயது அடையாளச் சான்று, வருமானச் சான்று, செல்லுபடியாகும் மொபைல் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மின்னஞ்சல் ஐடி ஆகியவை தேவை. ஆஃப்லைனில் விண்ணப்பிக்க நீங்கள் SBI கிளைக்குச் செல்ல வேண்டும்.
மேலும் படிக்க | 50 ரூபாயில் PVC ஆதார் அட்டை... கிழியாது... சேதம் ஆகாது... விண்ணப்பிக்கும் முறை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ