SCSS vs Bank FDs: மூத்த குடிமக்களுக்கு அசத்தல் வட்டி, பம்பர் லாபம் அளிக்கும் திட்டம் எது

Senior Citizen Saving Scheme: SCSS ஐந்து வருட முதிர்வு காலத்துடன் வருகிறது. மேலும் மூன்று ஆண்டுகளுக்கு இதை நீட்டிக்கலாம். தற்போது, ​​இந்தத் திட்டம் ஜனவரி 1, 2024 முதல் 8.2 சதவீத உத்தரவாத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 25, 2024, 06:53 PM IST
  • HDFC வங்கி மூத்த குடிமக்களுக்கு 4 சதவிகிதம் முதல் 7.75 சதவிகிதம் வரையிலான வட்டி விகிதத்தை வழங்குகிறது.
  • 5 வருட கால அளவிற்கு 7.5 சதவிகிதம்.
  • இது கடைசியாக அக்டோபர் 1, 2023 அன்று திருத்தப்பட்டது.
SCSS vs Bank FDs: மூத்த குடிமக்களுக்கு அசத்தல் வட்டி, பம்பர் லாபம் அளிக்கும் திட்டம் எது title=

Senior Citizen Saving Scheme: முதியவர்கள் பாதுகாப்பான மற்றும் நம்பகமான சேமிப்பு விருப்பங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதால், வங்கி நிலையான வைப்புத்தொகை அல்லது தபால் அலுவலக சிறு சேமிப்புத் திட்டத்தில் தங்கள் பணத்தை போடுவதே பெரும்பாலும் விருப்பம் கொள்கிறார்கள். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), தபால் அலுவலகம் (Post Office) வழங்கும் ஒன்பது சிறு சேமிப்பு திட்டங்களில் பிரபலமான திட்டமாகும். இது மூத்த தலைமுறையினருக்கு விருப்பமான தேர்வாக உள்ளது.

SCSS: முதிர்வு காலம் மற்றும் வட்டி விகிதங்கள்

SCSS ஐந்து வருட முதிர்வு காலத்துடன் வருகிறது. மேலும் மூன்று ஆண்டுகளுக்கு இதை நீட்டிக்கலாம். தற்போது, ​​இந்தத் திட்டம் ஜனவரி 1, 2024 முதல் 8.2 சதவீத உத்தரவாத வட்டி விகிதத்தை வழங்குகிறது. முதலீடு செய்தவுடன், வட்டி விகிதம் காலம் முழுவதும் இது நிலையான வட்டியாக இருக்கும். மேலும் மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் ரூ. 30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். 

SBI மூத்த குடிமக்கள் FD விகிதங்கள்

நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத ஸ்டேட் வங்கி (SBI), 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால அளவிற்கு 4 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. குறிப்பாக, 5 வருட கால அளவிற்கு, SBI மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது கடைசியாக டிசம்பர் 27, 2023 அன்று திருத்தப்பட்டது. 

மேலும் படிக்க | RBI New Rules: வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை: ரிசர்வ் வங்கியின் புதிய விதி இதோ

PNB மூத்த குடிமக்கள் FD விகிதங்கள்

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மூத்த குடிமக்களுக்கு (Senior Citizens)  7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை 4 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஐந்தாண்டுகளில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு மூத்த குடிமக்களுக்கு 7 சதவீத வட்டியை வங்கி வழங்குகிறது. சமீபத்திய விகிதங்கள் ஜனவரி 8, 2024 அன்று திருத்தப்பட்டன.

HDFC வங்கி மற்றும் ICICI வங்கி மூத்த குடிமக்கள் FD விகிதங்கள்

HDFC வங்கி (HDFC Bank) மூத்த குடிமக்களுக்கு 4 சதவிகிதம் முதல் 7.75 சதவிகிதம் வரையிலான வட்டி விகிதத்தை வழங்குகிறது. 5 வருட கால அளவிற்கு 7.5 சதவிகிதம். இது கடைசியாக அக்டோபர் 1, 2023 அன்று திருத்தப்பட்டது.

மறுபுறம், ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) 3.5 சதவிகிதம் முதல் 7.65 சதவிகிதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. 5 ஆண்டு காலத்திற்கு 7.5 சதவிகிதம் வழங்குகிறது. விகிதங்கள் கடைசியாக அக்டோபர் 16, 2023 அன்று திருத்தப்பட்டன.

SCSS vs Bank FDs: வட்டி விகிதங்களின் ஒப்பீடு

SCSS ஐ வங்கி FDகளுடன் ஒப்பிடும் போது, ​​SCSS 8.2 சதவீத நிலையான வட்டி விகிதத்துடன் முன்னணியில் உள்ளது. இதற்கு மாறாக, எஸ்பிஐ மற்றும் பிஎன்பி ஆகியவை முறையே 7.25 சதவீதம் மற்றும் 7 சதவீதத்தை 5 ஆண்டு கால அவகாசத்தில் வழங்குகின்றன. ஹெச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் ஐந்தாண்டுகளில் முதிர்ச்சியடையும் டெபாசிட்களில் மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதத்தை வழங்குகிறது.

வரிவிதிப்பு 

SCSS மற்றும் ஐந்தாண்டு வங்கி FD களில் உள்ள முதலீடுகள் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்குகளுக்கு (Tax Deductions) தகுதி பெறுகின்றன. எஸ்சிஎஸ்எஸ் டெபாசிட் வரம்பு ரூ. 30 லட்சம். இதில் காலாண்டு வட்டி ரூ. 61,500 ஆக உள்ளது. ரூ. 2,46,000 வருடாந்திர வட்டி 8.2 சதவீதத்தில் வழங்கப்படுகிறது. வட்டி ரூ. 50,000 ஐத் தாண்டினால் குறிப்பிட்ட விகிதத்தில் டிடிஎஸ் (TDS) கழிக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். 

கூடுதலாக, மூத்த குடிமக்கள் வருமான வரிச் சட்டத்தின் (Income Tax Act) 80TTB பிரிவின் கீழ் நிலையான வைப்புத்தொகை உட்பட வைப்புத்தொகையின் வட்டியில் ரூ. 50,000 வரை விலக்கு பெறலாம்.

மேலும் படிக்க | வங்கி மற்றும் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்கான புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News