வெளிநாட்டுக்கு போகாமலேயே ஷாப்பிங் செய்யலாம்! குறைந்த விலையில் வெளிநாட்டுப் பொருட்கள்

Shopping In Foreign Countries: வெளிநாட்டு பொருட்களை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள், ஷாப்பிங் செல்ல வெளிநாடுகளுக்குத்தான்  செல்ல வேண்டுமா? . 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 30, 2023, 10:09 AM IST
  • வெளிநாட்டு பொருட்களை வாங்குவதில் ஆர்வம் உள்ளவரா?
  • ஷாப்பிங் செல்ல வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமா? .
  • வெளிநாட்டு பொருட்கள் ஷாப்பிங் செய்ய சூப்பர் டிப்ஸ்
வெளிநாட்டுக்கு போகாமலேயே ஷாப்பிங் செய்யலாம்! குறைந்த விலையில் வெளிநாட்டுப் பொருட்கள் title=

வெளி நாட்டிலிருந்து ஷாப்பிங்: பலர் வெளிநாட்டு பொருட்களை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, அவர்கள் வெளிநாட்டுப் பயணத்திற்குச் செல்லும்போதோ அல்லது அவர்களது உறவினர்கள் அல்லது நண்பர்கள் வெளிநாட்டில் வசிக்கும்போதோ, அங்குள்ள பொருட்களைத் திரும்பக் கொண்டுவரச் சொல்வார்கள். ஆனால் வெளிநாட்டுப் பொருட்கள் வாங்க வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்களையும் நண்பர்களையும் எதிர்பார்க்க அவசியமும் இல்லை. அதேபோல, ஷாப்பிங் செய்ய வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

இந்தியாவில் இருந்து கொண்டே வெளிநாட்டு பொருட்களை வாங்கலாம். இந்தியாவிலும் டெலிவரி செய்யும் பல வெளிநாட்டு இணையதளங்கள் உள்ளன. இருப்பினும், வாங்கும் போது, ​​பொருந்தக்கூடிய ஷிப்பிங் செலவு மற்றும் வேறு சில கட்டணங்களை தனியாக செலுத்த வேண்டும். 

மேலும் படிக்க | ஆபாச சாட்டிங்கில் சிக்க வைக்கும் வாட்ஸ்அப் கால் - மோசடி கும்பலின் புதிய யுக்தி: எச்சரிக்கை
 
பியூட்டி பே (Beauty Bay)

நீங்கள் விரும்பினால், பியூட்டி பே ஷாப்பிங் இணையதளம் மூலம் எந்தப் பொருளையும் உங்கள் வீட்டிற்கு வரவழைக்கலாம். இந்த இணையதளத்தில் நிறைய ஒப்பனை பொருட்கள் உள்ளன. இந்தியாவிலும் டெலிவரி செய்யும் பியூட்டி பே இணையதளத்தில், வெளிநாட்டு பொருட்களின் விலைகள் இந்திய நாணயத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும், போக்குவரத்துக்கான செலவு உங்களைச் சாரும்.

Macys
இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும் உங்கள் இடத்திற்கே பொருட்களை டெலிவரி செய்யும் Macys, ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான உடைகள், காலணிகள், நகைகள், கைப்பைகள் என அனைத்து வகையான பொருட்களையும் விற்பனை செய்கிறது. ரூபாய் உட்பட பல கரன்சிகளில் ஷாப்பிங் செய்யலாம்.

மேலும் படிக்க | ஒய்வூதியம் பெறுவோர் ஹை அலர்ட்! நாளை கடைசி தேதி.. உடனே இதை செய்துவிடுங்கள்

LightInTheBox

எந்த ஒரு இந்தியரும் ஷாப்பிங் செய்யக்கூடிய இணையதளம் LightInTheBox, உலகளாவிய ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமாகும், இது உலகெங்கிலும் உள்ள நுகர்வோருக்கு நேரடியாக பொருட்களை வழங்குகிறது. பொருட்களை கவர்ச்சிகரமான விலைக்கு விற்கும் இந்த இணையதளம், இந்திய நாணயத்தில் பொருளின் விலைகளை குறிப்பிடுகிறது.

MiniInTheBox
இந்த இணையதளத்தில் மொத்த விலையில் ஆயிரக்கணக்கான பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.அனைத்து வகையான பொருட்களையும் கொடுக்கும் MiniInTheBox இணையதளம் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் சேவைகளை வழங்குகிறது. இணையதளத்தின் மூலையில் உள்ள ஷிப் டு ஆப்ஷனுக்குச் (Ship to option) செல்லும்போது, ​​நாட்டை இந்தியா என்று மாற்ற வேண்டியிருக்கும். இதற்குப் பிறகு, அனைத்து தயாரிப்புகளின் விலைகளையும் இந்திய நாணயமான INR இல் பார்க்கலாம். இதற்குப் பிறகு, உங்களுக்கு பிடித்த தயாரிப்புகளை ஆர்டர் செய்யலாம்.

அமேசான் யு.எஸ் (Amazon US)
அமேசான் யுஎஸ் மூலம் இந்தியாவில் எந்தப் பொருளையும் ஆர்டர் செய்யலாம். இதற்காக உங்கள் செயலியில் நாட்டை மாற்ற வேண்டும். அமைப்புகளுக்குச் சென்று நாட்டை மாற்றலாம். இதற்குப் பிறகு, உங்களுக்குப் பிடித்த வெளிநாட்டு பொருளை, உங்கள் இந்திய முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு சிறப்பு திட்டம்: ஆண்டுக்கு ரூ.60,000 பென்ஷன் பெறலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News