EPF Withdrawal: அவசர பணத்தேவையா? ஆன்லைனில் இப்படி பிஎஃப் அட்வான்ஸ் பெறலாம்... உடனடியாக!!

EPF Withdrawal: அலுவலக பணிகளில் வேலை செய்பவர்களுக்கு, வருங்கால வைப்பு நிதி (EPF) அவர்களின் ஓய்வூதியத்திற்கான முக்கியமான அம்சங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 14, 2023, 06:13 AM IST
  • EPFO: சம்பளம் வாங்குபவர்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு.
  • வேலை இழந்தாலும் பணத்தை எடுக்கலாம்.
  • ஆன்லைனில் PF இலிருந்து பணம் எடுக்கும் செயல்முறை என்ன?
EPF Withdrawal: அவசர பணத்தேவையா? ஆன்லைனில் இப்படி பிஎஃப் அட்வான்ஸ் பெறலாம்... உடனடியாக!! title=

EPF Withdrawal: இன்றைய காலகட்டத்தில் யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் பணம் தேவைப்படலாம். மக்களுக்கான தேவைகள் சொல்லிவிட்டு வருவதில்லை. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். இவை தவிர நம் வாழ்வின் வளர்ச்சிக்கான அடுத்தடுத்த நடவடிக்கைகள், சுபச்செலவுகள் என இப்படியும் பல செலகுகள் வருகின்றன. வீடு வாங்குவது, குழந்தைகளின் பள்ளி, கல்லூரி செலவுகள், திருமணம் ஆகியவற்றுக்கு நமக்கு பணம் தேவையாக இருக்கும். சிலருக்கு திடீரென வேலை பறிபோகலாம். அத்தகைய சூழலிலும் தினசரி தேவைகளுக்கு பணம் தேவவையாக இருக்கும். ஆனால், சம்பள வர்க்க மக்கள் இதை பற்றி அதிக கவலை கொள்ளத் தேவையில்லை. இதன் காரணத்தை பற்றி இந்த பதிவில் காணலாம். 

EPFO: சம்பளம் வாங்குபவர்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு

அலுவலக பணிகளில் வேலை செய்பவர்களுக்கு, வருங்கால வைப்பு நிதி (EPF) அவர்களின் ஓய்வூதியத்திற்கான முக்கியமான அம்சங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. ஒவ்வொரு மாதமும் பணியாளர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் (PF Account) ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கிறார்கள். பணியாளர் செலுத்தும் அதே தொகையை முதலாளி / நிறுவனமும் செலுத்துகின்றன. இது மறைமுகமாக பணியாளர்களுக்கு எதிர்காலத்திற்கான ஒரு நல்ல சேமிப்பாக அமைகின்றது. இது ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு முக்கிய அங்கமாகும். மிகவும் பாதுகாப்பான, நல்ல வருமானத்தை அளிக்கக்கூடிய ஒரு முதலீட்டு திட்டமாக இது உள்ளது. இது சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு அவர்களின் பிரச்சனைகளில் உதவியாக வருகிறது.

இந்த சூழ்நிலைகளில் பணம் எடுக்கலாம்

பொதுவாக பணி ஓய்வு பெற்றவுடன்தான் பிஎஃப் தொகை எடுக்கப்படுகின்றது. எனினும், பணி ஓய்வுக்கு முன்னரே சில அவசர தேவைகளோ அல்லது அத்தியாவசிய தேவைகளோ ஏற்பட்டால், பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம். சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பிஎஃப் தொகையை (PF Amount) திரும்பப் பெறுவதற்கான வசதியை EPFO ​​வழங்குகிறது. உங்கள் தேவை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் PF பணத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ எடுக்கலாம். கோவிட்-19 நோயின் போது மக்கள் நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டபோதும், ​​EPFO ​​இந்த வசதியை வழங்கியது. அதுமட்டுமின்றி, வீடு வாங்குதல், வீடு பழுதுபார்த்தல், குழந்தைகளின் கல்வி, குழந்தைகளின் திருமணம் போன்ற தேவைகளுக்கு பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.

மேலும் படிக்க | மாதம் ₹210 போதும்... ஆயுள் முழுவதும் ₹5000 பென்ஷன் தரும் அடல் பென்ஷன் திட்டம்..!

வேலை இழந்தாலும் பணத்தை எடுக்கலாம்

ஒருவருக்கு திடீரென வேலை போய்விட்டாலும் பணத்தை எடுக்கலாம். அந்த நபர் ஒரு மாதமாக வேலையில்லாமல் இருந்தால், பிஎஃப் பணத்தில் ஒரு பகுதியை திரும்பப் பெறலாம். இந்த சூழ்நிலையில், மொத்த தொகையில் 75 சதவீதம் வரை பணத்தை திரும்பப் பெறலாம் (EPFO Withdrawal). இரண்டு மாதங்களுக்கும் மேலாக வேலையில்லாமல் இருந்தால், முழு பிஎஃப் தொகையையும் திரும்பப் பெறலாம்.

ஆன்லைனில் PF இலிருந்து பணம் எடுக்கும் செயல்முறை

- EPFO இன் உறுப்பினர் போர்ட்டலுக்கு செல்லவும்.
- இதற்குப் பிறகு, மெனுவில் உள்ள Services விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- இதற்குப் பிறகு For Employees என்பதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது Member UAN Online Services -ஐத் தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது நீங்கள் UAN மற்றும் கடவுச்சொல் உதவியுடன் லாக் இன் செய்ய வேண்டும்.
- Online Services -இல் கிளைம் படிவம்-31, 19 & 10C ஐத் தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது நீங்கள் வங்கிக் கணக்கைச் சரிபார்க்க வேண்டும்.
- ஒப்பந்தச் சான்றிதழை (Certificate of Undertaking) அக்செப்ட் செய்ய வேண்டும்.
- மேலும் Proceed for Online Claim என்ற விருப்பத்தையும் கிளிக் செய்யவும்.
- புதிய படிவத்தில், 'I Want To Claim For' என்பதற்கு முன்பாக டிராப்டவுனிலிருந்து பிஎஃப் அட்வான்ஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- பணத்தை திரும்பப் பெறுவதற்கான காரணத்தையும் தேவையான தொகையையும் குறிப்பிடவும்.
- இப்போது செக் பாக்சை டிக் செய்து செயல்முறையை முடிக்க வேண்டும்.
- அதன் பிறகு, நிலையைச் சரிபார்க்க ரெஃபரன்ஸ் எண்ணைக் குறித்துக்கொள்ளவும்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களே.... HDFC வங்கி வழங்கும் சூப்பர் சான்ஸை மிஸ் பண்ணாதீங்க..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News